தமிழ் இலக்கியம் – எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்

0

TNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம் 

இங்கு  எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்

புறநானூறு

புறநானூறு – ஒளவையார்

ஆசிரியர் குறிப்பு:

 •  ஒளவையார் சங்கப் புலவர், அதியமானின் நண்பர்.
 • அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்
 • சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தும் அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஒளவையார்.
 • சங்கப்பாடல்கள் பாடிய ஒளவையாரும், ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவர் அல்லர் வேறு வேறானவர்.

நூல் குறிப்பு:

 • புறநானூறு – புறம் +நான்கு+ நூறு.
 • எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
 • எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.
 • சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது.
 • தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.
 • புறநானூறு
  “நாடாகு ஒன்றேர் காடாகு ஒன்றேர்
  அவலாகு ஒன்றேர் மிசையாகு ஒன்றேர்
  எவ்வழி நல்லவர் ஆடவர்
  அவ்வழி நல்லை; வாழிய நிலனே! “- ஓளவையார்

புறநானூறு – மோசிகீரனார்

ஆசிரியர் குறிப்பு :

 • தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர். கீரன் என்பது
 • குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது.
 • உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது, சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறை என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
 • இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.

நூல் குறிப்பு:

 • புறம்+ நான்கு+ நூறு = புறநானூறு
 • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
 • புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு
 • புறம் என்பது மறம் செய்தலும்,அறம் செய்தலும் ஆகும்.
 • பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு,
 • கல்விப் பெருமை, முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம் பண்பாடு முதலியவற்றை அறியலாம்.
 • புறநானூறு என்னும் இந்நூலைக் கற்பதனால் தமிழர் தம் பழங்கால புற வாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து கொள்கிறோம்.
 • “நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே
  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
  அதனால் யான்உயிர் என்பது அறிகை
  வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.”- மோசிகீரனார்

புறநானூறு – நக்கீரனார்

 ஆசிரியர் குறிப்பு:

 • மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
 • இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்
 • பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல் வாடையையும் இயற்றியவர்
 • இவ் உலகியல் உண்மையை இப்பாடலில் கூறியுள்ளார்

நூல் குறிப்பு:

 • புறநானூறு= புறம் + நான்கு + நூறு
 • புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
 • புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.
  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
 • இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
 • இப்பாடல்கள் வாயிலாக பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம்.
 • இந்நூலின் சில பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
 • “தென்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
  நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
  கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
  உண்பது நாழி உடுப்பவை இரண்டே
  பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே
  செல்வத்துப் பயனே ஈதல்
  துய்ப்போம் எனினே தப்புந பலவே”.- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

புறநானூறு – கண்ணகனார்

ஆசிரியர் குறிப்பு:

 • இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
 • கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
 • அவருடன் இருந்தவர் கண்ணகனார் ஆவார்.
 • அவன் உயிர் துறந்த பொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.

நூற் குறிப்பு:

 • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு
 • இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்டுள்ளது.
 • இந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை மன்னர்களின் வீரம், கொடை, புகழ் வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
 • தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.
 • இருநூற்றுப்பதினெட்டாம் பாடல் இடம் பெற்றுள்ளது.

நற்றிணை

ஆசிரியர் குறிப்பு:

 • மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால் மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
 • இவர் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
 • இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடல்களும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள் உள்ளன.
 • இவர் சங்க காலத்தவர்

நூற் குறிப்பு:

 • பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்க நூல்கள் எனப் போற்றப்படுவன.
 • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும்,நல் என்று அடைமொழி பெற்றுப் போற்றப்படுவதும் நற்றிணையே.
 • நற்றிணை பல்வேறு காலங்களில் புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல்,  அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத்  தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.
 • இதில் ஐவகைத் திணைகளுக்குமான பாடல்கள் உள்ளன.
 • இதிலுள்ள பாடல்கள் ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரல்லையும் கொண்டவை.
 • இப்பாடல்களைத் தொகுத்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.
 • நற்றிணைப் பாடல்கள் நானூறு; பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.

 நற்றிணை:(தோழி தலைமகனிடம் கூறியது)

“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே”.- மிளைகிழான் நல்வேட்டனார்

கலித்தொகை

ஆசிரியர் குறிப்பு:

 • நல்லந்துவனார் சங்க காலத்தவர்
 • இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
 • இவர் நெய்தல் கலியில் முப்பத்து மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
 • கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர்.

நூற் குறிப்பு:

 • எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள்
 • எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை  கலிப்பாக்களால் அமைந்தது.
 • கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்ந்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
 • கலித்தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது.
 • கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது.
 • இதனைத் தமிழ்ச் சான்றோர் கற்றறிந்தார். ஏத்தும் கலி எனச் சிறப்பித்துக் கூறுவர்.

கலித்தொகை:

“ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை

அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”

 குறுந்தொகை

நூல் குறிப்பு:

 • குறுமை+தொகை = குறுந்தொகை
 • குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை
 • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.
 • அகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள்.
 • இப்பாடல்கள் குறைந்த நான்கடிகளையும், அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன.
 • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
 • பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
 • இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
 • இந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.

இறைவன் தருமிக்கு அருளிய பாடல்:

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே. “- குறுந்தொகை 2

குறுந்தொகை

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”.- தேவகுலத்தார்.

வாழ்த்து – தாயுமானவர்

ஆசிரியர் குறிப்பு:

 • பெயர் – தாயுமானவர்
 • பெற்றோர் – கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
 • ஊர் – நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
 • மனைவி – மட்டுவார் குழலி
 • நூல் – தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
 • பணி – திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
 • காலம் – கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

 • வாழ்த்தாக இடம் பெற்றுள்ள பாடல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்னும்
 • நூலில் பராபரக் கண்ணி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
 • இந்நூல் தெய்வத் தமிழின் இனிமையும், எளிமையும், பொருந்திய செய்யுள் நடையால் மனத்தூய்மை, பக்திச்சுவை ஆகியவற்றை ஊட்டும்.
 • திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவன் தாயமானவர் திருவருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
 • தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!