IND vs ENG 2வது டெஸ்ட் – இங்கிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டு உள்ளார்.
டெஸ்ட் போட்டி:
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இடைவிடாத மழையால் டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் தலா 2 புள்ளிகள் அபராதமாக பெறப்பட்டது. எனவே முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் முழு வீச்சில் தயாராகி உள்ளன. காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகி உள்ளார்.
ICC டெஸ்ட் தரவரிசை – 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோஹ்லி, பும்ராஹ் முன்னேற்றம்!
தற்போது இவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய நேரப்படி 3.45 மணியளவில் ஆட்டம் தொடங்குகிறது.
TN Job “FB Group” Join Now
இந்திய 11 அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து 11 அணி: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஹசீப் ஹமீட், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஒல்லி ராபின்சன், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்