அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் காலியிடங்கள் – தமிழக அரசு உத்தரவு!

0
அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் காலியிடங்கள் - தமிழக அரசு உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் காலியிடங்கள் - தமிழக அரசு உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் காலியிடங்கள் – தமிழக அரசு உத்தரவு!

கொரோனா காரணமாக அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பில் ஏராளமான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொறியியல் காலியிடங்கள்

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ம் தேதி வரை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்!

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் 4 அரசு பொறியியல் கல்லூரிகளும், 10 அரசு உதவி புரியும் கல்லூரிகளும், 13 அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் உள்ளது. இதில் உள்ள காலியிடங்கள் நிரப்ப தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் கடந்த மாதம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இங்குள்ள பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தொழில்நுட்பக்கல்வி இயக்குநரும், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளரும் ஆலோசனை மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இந்த ஆலோசனைக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களை பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் கொண்டு நிரப்ப வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதன்படி தமிழக அரசு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களை பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் கொண்டு பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வது அண்ணா பல்கலைக்கழகத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!