அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்ப விவரங்கள் இதோ!

0
அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்ப விவரங்கள் இதோ!
அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்ப விவரங்கள் இதோ!
அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்ப விவரங்கள் இதோ!

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படிவத்தில் குறிப்பிட்டுள்ள படியான தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆவின் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா கால பாதிப்பின் காரணமாக முடக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்புகள், பாதிப்புகள் குறைந்ததன் விளைவால் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களின் செயல்திறனை அதிகரிக்க அதிக அளவில் ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளன. அதுபோல், அரசு துறைகளில் உள்ள காலியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி, அங்கு என்ஏடிபி திட்டத்தின் மூலம் காலியாக உள்ள கால்நடை மருந்து ஆலோசகர் பணிக்கு 9 இடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு மாதம் ரூ.43,000 ஊதியம் வழங்குவதாகவும், 9 காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அரசின் முடிவு என்ன?

இப்பணிக்கு விண்ணப்பிக்க B.V.SC மற்றும் A.H படிப்பை முடித்திருக்க வேண்டும், கணினி பற்றிய அறிவு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 50 வரை இருக்க வேண்டும். இந்த பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 3ம் தேதி ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் – 641605 என்ற முகவரியில் நடக்கும். இது குறித்த அதிக தகவல்களை அதிகாரபூர்வ இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here