வங்கிகள் கடன் தொகை EMI செலுத்த அவகாசம் வழங்கல் – மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை!!

7
வங்கிகள் கடன் தொகை EMI செலுத்த அவகாசம் வழங்கல் - மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை!!
வங்கிகள் கடன் தொகை EMI செலுத்த அவகாசம் வழங்கல் - மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை!!
வங்கிகள் கடன் தொகை EMI செலுத்த அவகாசம் வழங்கல் – மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை!!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேலைவாய்ப்பு, வருமானம் போன்றவற்றை பலர் இழந்து தவித்து வரும் நிலையில் வங்கிக்கடனுக்கான EMI செலுத்துவதற்கு சலுகை அளிக்காதது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடன் சலுகை:

கொரோனாவின் ஒவ்வொரு அலை தாக்கத்தின் போதும் பலர் வேலையின்மை, வருமான இழப்பு, நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு வாடகை முதல் வங்கிகளில் EMI செலுத்துவது வரை அனைத்திற்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதே போல மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து வங்கி கடனுக்கான EMI செலுத்துவதில் 6 மாத காலம் சலுகை அளித்தது.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு – 7வது ஊதியக்குழு விவரம்!!

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பல மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனால் கடந்த ஆண்டு அறிவித்ததை போன்ற சலுகைகளை மீண்டும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மேலும் ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி இந்த சலுகைகளை வழங்க பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக செயல்பட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அதே போல தமிழக முதல்வரும், ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாத தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது 6 மாத கடன் சலுகையுடன், கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை பெற விரும்புவோர் சலுகையை பெறும் வகையில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. நான் சிறு உணவக ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறேன்…சரியான முறையில் தொழில் இயங்காமல் ஒரு மாத காலமாக மூடி வைத்துள்ளோம்…வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்து வருகிறோம்..வங்கியில் கடன். கந்து வட்டிக்கு பணம். தினசரி வட்டிக்கு பணம்.குழுகளில் பணம் பெற்று இருக்கும் பட்சத்தில் நாங்கள் எப்படி கடனை அடைப்பது ..6 மாதம் அவகாசம் கொடுத்து அதற்கு வட்டிக்கு மேல் வட்டி பிடிக்ககூடாது. தமிழக அரசை கேட்டுகொள்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here