மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு – 7வது ஊதியக்குழு விவரம்!!

0
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு - 7வது ஊதியக்குழு விவரம்!!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு - 7வது ஊதியக்குழு விவரம்!!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு – 7வது ஊதியக்குழு விவரம்!!

மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த முழுமையான விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

ஊதிய உயர்வு:

மத்திய அரசு கொரோனா கால பேரிடர் காரணமாக கடந்த 2020 ஜனவரி முதல் ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு முதலியவற்றை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணைகளுக்கான சலுகைகளை ஊழியர்களுக்கு அளிக்கப்போவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார். அதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது.

தமிழக கோவில் பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை – அரசு அறிவிப்பு!!

தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17% ஆக உள்ளது. நிலுவை தொகையினையும் சேர்த்து 28% ஆக அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 7 வது ஊதியக்குழுவின் அட்டவணை படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பார்ப்போம்.

ஊதிய உயர்வு:

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 7 வது ஊதியக் குழுவின் பொருத்துதல் காரணி மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் அவர்களின் ஊதியம் அடிப்படை ஊதியத்தில் இருந்து 2.5 மடங்கு அதிகரிக்கும்.

பொருத்துதல் காரணி (Fitment Factor):

மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய பொருத்துதல் காரணி 2.57 ஆக உள்ளது. ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த பொருத்துதல் காரணியால் பெருக்கப்பட்டு அவர்களின் ஊதிய உயர்வு கணக்கிடப்படுகிறது. ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக இருந்தால் அவரது ஊதியம் தற்போதைய பொருத்துதல் காரணி 2.57 ஆல் பெருக்கப்பட்டு ரூ.46,260 ஆக கிடைக்கும்.

TN Job “FB  Group” Join Now

அகவிலைப்படி கணக்கீடு:

அடிப்படை ஊதியத்துடன், டிஏ, டிஏ, எச்ஆர்ஏ, மருத்துவ திருப்பிச் செலுத்துதல் போன்றவையும் அதிகரிக்கப்படும். அகவிலைப்படி வருடத்திற்கு இரண்டு தவணைகள் 6 மாத சராசரி பணவீக்கத்தின் அடிப்படியில் உயர்த்தப்படும்.

பயணப்படி:

அகவிலைப்படி உயரும் போது அதனுடன் சேர்ந்து பயணப்படியும் அதே அடிப்படையில் உயர்த்தப்படுகிறது. இவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட பிறகு ஒரு ஊழியரின் மாதத்தின் மொத்த செலவு (CTC ) கணக்கிடப்படும்.

பி.எஃப், கிராச்சுட்டி அதிகரிப்பு:

வரும் ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அகவிலைப்படி உயர்வுடன், இபிஎஃப் மற்றும் கிராச்சுட்டி உயர்வையும் பெறுவார்கள். ஈபிஎஃப், அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவிகிதம் கணக்கிடப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!