வாக்காளர் அடையாள அட்டை குறித்து முக்கிய தகவல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

0
வாக்காளர் அடையாள அட்டை குறித்து முக்கிய தகவல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வாக்காளர் அடையாள அட்டை குறித்து முக்கிய தகவல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வாக்காளர் அடையாள அட்டை குறித்து முக்கிய தகவல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது அடிப்படை கடமையாகும். மேலும் வாக்களிப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி உள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்கலாம். இந்தியாவில் ஆண்டுதோறும் வாக்காளர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிதாக உள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனை தவிர இந்த அட்டையில் பெயர் திருத்தம், இருப்பிட மாற்றம் குறித்து திருத்தங்கள் மேற்கொள்வது என அனைத்து வகையான பணிகளும் சிறப்பு முகாம்கள் மூலம் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 9,436 பேருக்கு தொற்று உறுதி!

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாக செய்தால் 18 வது பிறந்த நாளில் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினார். அதில், இந்தியாவில் வாக்காளர் பட்டியல் ஆண்டிற்கு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டு அளவில் வெளியிடப்படுகிறது. அதன்படி, ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளி வரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும் எனவும், ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி செய்தால் அடுத்தடுத்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை அடுத்து 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் செய்திருந்தால் 18 வது பிறந்த நாளில் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here