பிக் பாஸ் கேபி நடிக்கும் விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

0
பிக் பாஸ் கேபி நடிக்கும் விஜய் டிவி 'ஈரமான ரோஜாவே சீசன் 2' சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸ் கேபி நடிக்கும் விஜய் டிவி 'ஈரமான ரோஜாவே சீசன் 2' சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸ் கேபி நடிக்கும் விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் வெற்றி பெற்ற மேட்னி நேர சீரியலான ஈரமான ரோஜாவே சீரியலின் அடுத்த சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோ இன்று இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஈரமான ரோஜாவே சீசன் 2:

விஜய் டிவியில் மாலை மற்றும் இரவு நேர தொடர்கள் தான் அதிக அளவில் பேசப்படுகிறது. ஹிட் வரிசையிலும் உள்ளது. ஆனால் மதியம் நேர ஒளிபரப்பில் மெகா ஹிட் அடித்த ஒரு சீரியல் தான் ஈரமான ரோஜாவே. மிகவும் வெற்றி காரணமாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த சீரியல் ஓடிய நிலையில், தற்போது சில மாதங்களுக்கு முன்னர் தான் சமீபத்தில் முடிந்தது. இதில் நடித்த பவித்ரா தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் திரவியம் அடுத்து எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிருக்கு அவரது மனைவி அளித்த சர்ப்ரைஸ் – வாழ்த்தும் ரசிகர்கள்!

இந்நிலையில், ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான சில தகவலின் படி இந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 எடுக்கப்படுகிறது என்பது உறுதியானது. ஆனால் அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் தற்போது விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூடுயூப் சேனலில் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலின் ப்ரோமோ வெளியாக இருப்பதாக டைமிங் ஓடிக் கொண்டுள்ளது.

விஜய் டிவி அறந்தாங்கி நிஷா மகளுக்கு ‘டெங்கு’ – அவரே வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

அதன் போஸ்டரில் பிக்பாஸ் கேபி, தேன்மொழி BA சீரியல் சித்தார்த் இருவரும் ஜோடியாக திருமண கோலத்தில் உள்ளனர். இதே போல் திரவியம் மற்றொரு பெண்ணுடன் ஜோடியாக திருமண கோலத்தில் உள்ளார். இதனால் இந்த சீரியல் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மக்களின் ஃபேவரிட் ஆன பல நட்சத்திரங்களும் இதில் உள்ளதால் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!