ஆதார் எண் மூலமாக e-PAN CARD பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் எண் மூலமாக e-PAN CARD பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் எண் மூலமாக e-PAN CARD பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் எண் மூலமாக e-PAN CARD பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

நாடு முழுவதும் மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றான PAN CARD பெற ஆதார் நம்பர் மட்டும் போதும், அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PAN CARD விண்ணப்பிக்கும் முறை:

நாடு முழுவதும் மக்களின் அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு இருக்கிறது. அரசின் சலுகைகளை பெற மக்களுக்கு ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு எண் (PAN card), வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை கட்டாயம் தேவை. இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஒரு குடிமகனுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். ஆனால் அப்படி இல்லாதவர்கள் எளிய முறையில் இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNUSRB PC கான்ஸ்டபிள் 10,000+ காலிப்பணியிடங்கள் – இளைஞர்கள் கவனத்திற்கு! விரைவில் அறிவிப்பு!

மேலும் PAN CARD மக்களின் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனைகள் செய்ய அவசியம் தேவையாக இருக்கிறது, கொரோனா காரணமாக மக்கள் வீடுகளுக்குள் இருப்பதால் ஆன்லைன் பண பரிமாற்றம் அதிகரித்து உள்ளது. அதனால் வங்கி கணக்கு அதற்கு முக்கியம் ஆகும். இந்நிலையில் PAN CARD இல்லாதவர்கள் e-PAN-க்கு விண்ணப்பிக்க ஆதார் நம்பரை பயன்படுத்தலாம். மேலும் உங்களிடம் பான் கார்டு (PAN card) இல்லையென்றால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும், இந்த சேவையை பெற சரியான ஆதார் அட்டையை வைத்திருப்பது அவசியம் மற்றும் உங்கள் KYC விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.

எளிய வழிமுறைகள்:

  • முதலில் வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும் அல்லது https://www.incometax.gov.in/iec/foportal என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஹோம் பேஜில் இருக்கும் Quick Links செக்ஷனில் உள்ள ‘Instant E-PAN’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஓப்பனாகும் புதிய பேஜில் காணப்படும் ‘Get New e-PAN’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
  • உங்களுக்கான e-PAN ஒதுக்கீட்டை பெற நீங்கள் உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்ய வேண்டும். பின் I confirm that என்ற பாக்ஸை டிக் செய்த பிறகு, Continue பட்டனை tap செய்ய வேண்டும்.
  • இதற்கு பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதார் OTP-யை பெறுவீர்கள். நீங்கள் தேவையான இடத்தில் இந்த OTP ஐ வழங்க வேண்டும் மற்றும் ‘Validate Aadhaar OTP and Continue’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • OTP வேலிடேஷன் பேஜில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று, Continue பட்டனை அழுத்த வேண்டும்.
  • உங்கள் OTP-ஐ டைப் செய்து பாக்ஸை சரிபார்த்து Continue பட்டனை மீண்டும் ஒருமுறை tap செய்ய வேண்டும்
  • உங்கள் இமெயில் ஐடி அங்கீகரிக்கப்படவில்லை எனில், ‘Validate email ID’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் credentials-களை என்டர் செய்து Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்க்க சமர்ப்பித்தவுடன் உங்களுக்கு ஒப்புகை எண் (acknowledgment number) வழங்கப்படும்.
  • உங்கள் ஆதார் எண்ணை என்டர் செய்வதன் மூலம் உங்கள் பான் ஒதுக்கீட்டின் (PAN allotment) ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.
  • உங்களுக்கான e-PAN கிடைத்த பிறகு அதை டவுன்லோட் செய்ய 2 ஸ்டெப்ஸ்களை முடிக்க வேண்டும், ‘Check Status/Download PAN’ ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண் மற்றும் captcha code-ஐ வழங்கவும், பின் Submit ஐகானை தட்டவும், OTP-ஐ என்டர் செய்து சரிபார்த்து ப்ராசஸை முடிக்க வேண்டும்.
  • PAN allocation வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருந்தால் PDF ஃபைல் லிங்க் 10 நிமிடங்களுக்குள் வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!