தொலைத்தொடர்பு துறையில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Department of Telecommunication ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Department of Telecommunication வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- 56 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
- தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
பிரசார் பாரதியில் Copy Editor காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.