மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வேண்டுமா? – 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு!

0
மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வேண்டுமா? - 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு!
மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வேண்டுமா? - 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு!
மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வேண்டுமா? – 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(Staff selection commission) ஆனது இந்த வருட இறுதிக்குள் 73,333 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

அரசு வேலை:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலமாக பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் SSC, சுமார் 73,333 காலியிடங்களை நிரப்ப முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய அரசின் அமைச்சகங்கள், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 73,333 பணியிடங்கள் குறித்த விவரத்தை, மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தேர்வாணையத்திடம் சமர்ப்பித்து உள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மட்டும் 28,000 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வின் மூலம் 24,605 காலி இடங்களும், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான, டெல்லி காவல் 2022 தேர்வின் மூலம் 6433 காலி இடங்களும், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வின் மூலம் 20,814 காலி இடங்களும், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வின் 2022 மூலம் 2960 காலி இடங்களும், மத்திய ஆயுதப் படைகளில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வின் மூலம் 4300 காலி இடங்களும், பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) 2022 தேர்வின் மூலம் 4682 காலி இடங்கள் என மொத்தம் 73,333 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அதிக லாபம் – வட்டி விகிதம் உயர்வு! மூத்த குடிமக்களுக்கு சலுகை!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த பணியிடங்களில் பன்னோக்கு பணியாளர் மற்றும் டெல்லி காவலர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் கல்வி தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பணிகளில் சேர எதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய அரசு பணி வேண்டும் என ஆர்வமும், மேலே குறிப்பிட்ட தகுதியும் இருப்பவர்கள், ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தேர்வுகளுக்குரிய உரிய அறிவிப்பு வரும்பொழுது விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!