ஐடி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!

0
ஐடி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!
ஐடி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!
ஐடி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான Wipro, தனது 85% ஊழியர்களுக்கு 100% Variable Pay வழங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஹெய்ரி டெலாபோர்ட் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு அறிவிப்பு:

இந்தியாவில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அதில் நான்காவது இடத்தை பிடித்த பெருமை விப்ரோ நிறுவனத்திற்கு உண்டு. இந்நிலையில் விப்ரோ நிறுவனத்தில் கடந்த ஆண்டுகளில் எதிர்பார்த்த லாபம் இல்லாததால், Variable Pay தொகையை குறைத்து அதனை ஊழியர்களுக்கு வழங்கியது. அதில் B மற்றும் C மற்றும் அதற்கு மேல் மிட்-மேனேஜர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் Variable Pay வாங்கவில்லை.

அந்த வகையில் இந்த ஆண்டு விப்ரோ நிறுவனத்திற்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. அதனால் தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் விப்ரோ நிறுவனம், தனது 85% ஊழியர்களுக்கு 100% Variable Pay வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும் 10,000க்கு அதிகமான ஊழியர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கி இருப்பதாக ஹெய்ரி டெலாபோர்ட் தெரிவித்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன் மூன்லைட்டிங் வேலையில் ஈடுபட்டதை தொடர்ந்து 300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

சிலிண்டர் பயனர்களுக்கு ஜாக்பாட் – ரூ.22,000 கோடி மானியம்! அமைச்சரவை ஒப்புதல்!

Exams Daily Mobile App Download

நிறுவனத்தின் லாபம் குறித்து ஒரு அறிக்கையில் கூறுகையில், ஜூலை-செப்டம்பரில் ரூ. 2,659 கோடியாக இருந்த நிறுவனத்தின் லாபம், முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.2,930 கோடியை விட 9.27 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.19,667.4 கோடியாக இருந்த நிறுவனத்தின் வளர்ச்சி தற்போது 14.60 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும் ரூ.22,539.7 கோடியாக இருக்கிறது. முந்தைய காலாண்டில் ரூ.21,528.6 கோடியிலிருந்து 4.69 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!