கொரோனா பணியில் உயிரிழந்துள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
கொரோனா பணியில் உயிரிழந்துள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கொரோனா பணியில் உயிரிழந்துள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கொரோனா பணியில் உயிரிழந்துள்ள ஊழியர்களுக்கு இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ள ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீடு தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இழப்பீடு தொகை:

கொரோனா இரண்டாம் அலையின் பரவல் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. இதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர இன்னும் சில காலம் ஆகலாம். கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் பல மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் என்று பலர் முழு அர்ப்பணிப்புடன் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டனர்.

ஜூன் 16 ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் – நாளை முக்கிய அறிவிப்பு!

இவர்களில் பலர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ள ஊழியர்களுக்கு பிரதமரின் கரிப் கல்யாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இழப்பீடு தொகையினை பெற விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை 180 நாட்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கு இறந்தவரின் அடையாளாச் சான்று, மனுதாரரின் அடையாளாச் சான்று, மனுதாரர் மற்றும் இறந்தவரின் உறவு முறை சான்று, கொரோனா பரிசோதனை சான்று, இறப்பு குறித்து மருத்துவமனையில் அளித்த அறிக்கை, இறப்பு சான்று மற்றும் இறந்தவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதற்கான சுகாதார அமைப்பு அல்லது சுகாதார அலுவலகத்தால் வழங்கப்பட்ட சான்று போன்ற அனைத்து ஆவணங்களையும் அதன் நகலுடன் திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம், டிஎம்எஸ், தேனாம்பேட்டை, சென்னை – 600006 என்ற முகவரிக்கு மனு அளித்து இதற்கான பலனடைந்து கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!