திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020

1
திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 !
திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 !
திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்  திண்டுக்கல் வருவாய் துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 05
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

வேடசந்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

கிராம உதவியாளர் வயது வரம்பு:

வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள், தாழ்த்தப்ட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகள் நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

கிராம உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:

கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) விண்ணப்பிக்கலாம். குட்டம் கிராமத்திற்கு பொதுப்பிரிவினைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்(சி மற்றும் டி பிரிவு) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வேல்வார்கோட்டை கிராமத்திற்கு எஸ்.ஸி பிரிவில் (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பிரிவில் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தென்னம்பட்டி கிராமத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் (ஆண் /பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த (பி.சி.யில்-முஸ்லீம் அல்லாதவர்) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

TN விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேடசந்தூர் வட்டாட்சியர் திருமதி பா.ஆ.லதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here