பிரதமர் அறிமுகம் செய்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி – முழு விவரம்!

0
பிரதமர் அறிமுகம் செய்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி - முழு விவரம்!
பிரதமர் அறிமுகம் செய்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி - முழு விவரம்!
பிரதமர் அறிமுகம் செய்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி – முழு விவரம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்னும் நாட்டு மக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பிரதமர் அறிமுகம்:

ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் என்பது இந்திய அரசின் தேசிய ஆரோக்கியக் கொள்கை யின் ஒரு பகுதி ஆக இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இதன் நோக்கம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை இலவசமாக, பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும். இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும்.

IPL 2021: SRH vs RR: 165 ரன்கள் ஐதராபாத் அணிக்கு இலக்கு!

இதன் மூலம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் மக்கள்தொகை ஆனது ஐக்கிய அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மொத்தக் கூட்டு மக்கள்தொகையினை விட அதிகம் ஆகும். இந்நிலையில், செப்டம்பர் 27ம் தேதியான இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் போன்ற ஒரு பிரத்யேக எண் கொண்ட டிஜிட்டல் ஹெல்த் ஐடி வழங்கப்படும். அதில், குறிப்பிட்ட நபர்களின் மருத்துவ விவரங்களை பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,657 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

மருத்துவர்கள் இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி மூலம் நோயாளியின் முழு மருத்துவ விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். நோயாளிகள் தங்களின் மருத்துவ சான்றிதழ்கள், பரிசோதனை முடிவுகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இல்லை. இதன் அறிமுக விளைவில் பிரதமர் மோடி, ஹெல்த் ஐடி என்பது 14 இலக்க எண். ஒருவர் தனது ஆதார் மற்றும் மொபைல் எண் உதவியுடன் https://nha.gov.in/NDHM என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனக்கான ஹெல்த் ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும், இது குறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!