IPL 2021: SRH vs RR: 165 ரன்கள் ஐதராபாத் அணிக்கு இலக்கு!

0
IPL 2021: SRH vs RR: 165 ரன்கள் ஐதராபாத் அணிக்கு இலக்கு!
IPL 2021: SRH vs RR: 165 ரன்கள் ஐதராபாத் அணிக்கு இலக்கு!
IPL 2021: SRH vs RR: 165 ரன்கள் ஐதராபாத் அணிக்கு இலக்கு!

ஐபிஎல் போட்டியின் 40 வது ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில், முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் போட்டி:

ஐபிஎல்-ன் 40ம் நாள் தொடர் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இன்று ராஜஸ்தான் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதவுள்ளது. கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியுடன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 14 முறை மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடக்கும் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,657 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். மாலை 7:30,மணிக்கு டாஸ் போடப்பட்டு ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் ஐதராபாத் அணி பவுலிங்கில் இறங்கியுள்ளது. ஆட்டத்தில் சாம்சன் 82 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார். மேலும், ஜெய்ஸ்வால் 36 ரன்கள் மற்றும் லோமரர் 29 ரன்களை எடுத்துள்ளனர்.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ 8 டைட்டில் வின்னர் – ஸ்ரீதர் சேனா யார் தெரியுமா?

ஐதராபாத் அணியின் கவுல் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சந்தீப் சர்மா, புவனேஸ்வர், ரஷீத் கான் இவர்கள் தலா 1 விக்கெட்டை எடுத்துள்ளனர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 164 ரன்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்துள்ளது. இதனால் அடுத்து களம் இறங்கும் ஐதராபாத் அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!