தமிழகத்தில் சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் – இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டர பாருங்க!!

0
தமிழகத்தில் சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் - இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டர பாருங்க!!
தமிழகத்தில் சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் - இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டர பாருங்க!!தமிழகத்தில் சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் - இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டர பாருங்க!!
தமிழகத்தில் சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் – இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டர பாருங்க!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். முக்கியமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதற்கு ஏற்றார் போல டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆதலால் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். இதையடுத்து தற்போது டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை பற்றி விரிவாக பார்ப்போம். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி, எலும்பில் வலி, வாந்தி, சோர்வு, தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அத்துடன் பரிசோதனை மேற்கொண்டு எந்தவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

ரூ.100 இருந்தால் போதும்! எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம் – அரசின் சூப்பர் திட்டம்!

Exams Daily Mobile App Download

மேலும் ஒருவருக்கு பொதுவாக ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்க வேண்டும். ஆனால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு அந்த எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து விடும். அதனால் உங்களின் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை பரிசோதித்து கொள்ள வேண்டும். மேலும் டெங்குவில் 4 வகையான வைரஸ் உள்ளது. இதையடுத்து நீங்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டால் மீண்டும் அதே வைரஸ் உங்களை தாக்காது. ஆனால் வேறு வகையிலான டெங்கு வைரசால் உங்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!