தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

1
தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து இன்று குறைந்து காணப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்கம், வெள்ளி விலை:

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மக்கள் அனைவராலும் விரும்பப்படக்கூடிய ஆபரணம் ஆகும். அதனால் தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையிலேயே இருக்கின்றது. நேற்று முன்தினம் 72 ரூபாய் குறைந்து ஆபரணத் தங்கம் 1 கிராம் 4,456 ரூபாய்க்கும், 1 சவரன் 35,648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை, மாலை என இரு நேரங்களிலும் அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டது. இதற்கு இந்திய பங்குச்சந்தையில் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மக்களின் தேவை அடிப்படையில் தான் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது அந்நிய முதலீடுகளும் தங்கத்தில் அதிகளவில் செய்வது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காண உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

ஆனால் மேலைநாட்டு மக்கள் தங்கத்தை விரும்ப மாட்டார்கள். நேற்று மாலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35,872க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,484க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.68.60க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய (அக்.20) நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,474க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.35,792க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – யார் யாருக்கு கிடைக்கும்? கணக்கீடு விவரங்கள்!

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேபோல் தங்கத்தின் விலையும் கொரோனா காலகட்டத்தில் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் தற்போது விலை உயர்வு என்பது 200 ரூபாய் வரை இருக்கின்றது. குறையும் போது வெறும் 20 ரூபாய் அளவில் தான் குறைகிறது என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. செம….. அதிரடி விலைகுறைவு …. மக்கள் செம ஆனந்தம் ….கிராமுக்கு 10 ரூபாய் குறைவு …. எதிர்பாராத மகிழ்ச்சியில் மக்கள் திண்டாட்டம்😂😂😂😂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!