தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் – முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் - முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் - முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் – முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான விதிகளை அரசு கடைபிடிக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இறப்பு சான்றிதழ்:

கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் தங்களது நெருக்கமான உறவுகளை இழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை வீடுகளுக்கு இறுதி சடங்கு செலுத்த கூட அனுமதிக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களில் இணை நோய் உள்ளவர்கள், கொரோனாவால் மரணம் என குறிப்பிடாமல், இணை நோயால் மரணம் என குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதாக ஸ்ரீ ராஜலட்சுமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கொரோனாவால் ஏற்படும் மரணத்தை இறப்பு சான்றிதழில் குறிப்பிட வேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

SBI வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் – 6.70% ஆக நிர்ணயம்!

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளதாகவும், அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் – மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

மேலும் இறப்பு சான்றிதழ் வழங்கும் விதிகளை கட்டாயம் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 31ம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரிய வந்தால் ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!