SBI வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் – 6.70% ஆக நிர்ணயம்!

0
SBI வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் - 6.70% ஆக நிர்ணயம்!
SBI வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் - 6.70% ஆக நிர்ணயம்!
SBI வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் – 6.70% ஆக நிர்ணயம்!

பாரத ஸ்டேட் வங்கி வர இருக்கும் பண்டிகை காலத்தை ஒட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.

பண்டிகை கால சலுகை:

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளின் சேவை கட்டணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து வங்கிகளும் தங்களது வங்கியின் நிர்வாக சேவை கட்டணங்களை மாற்றி அமைத்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி செப்டம்பர் 16ம் தேதியான இன்று முதல் புதிய வட்டி விகிதத்தில் வீட்டு கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் – மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

அதன்படி இனி வரும் காலங்களில் வீட்டு கடன்களை வெறும் 6.70 சதவீதத்தில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் பண்டிகை காலங்களில் வீட்டு கடன்களை மிகவும் எளிமையாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் வங்கியின் செயல்முறை கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இதுவரை நடைமுறையில் இருந்த மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே வங்கி கடன் என்ற வரைமுறையையும் தளர்த்தியுள்ளது.

TN TRB முதுகலை ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இப்போது வருங்கால வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தொழில் சார்ந்த வட்டி பிரீமியம் வசூலிக்கப்படுவதில்லை. சில்லறை மற்றும் டிஜிட்டல் வங்கி மேலாண்மை இயக்குனர் சிபிஎஸ் செட்டி இது தொடர்பாக இந்த முறை நாங்கள் சலுகைகளை கூடுதலாக வழங்கியுள்ளோம். கடன் தொகை மற்றும் கடன் வாங்குபவரின் தொழில் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கடனாளிகளின் அனைத்து பிரிவுகளுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. மேலும் 6.70% வீட்டுக் கடன் சலுகை மற்ற வங்கியில் இருந்து மாற்றுதலாக வரும் கணக்குகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!