தேனியில் ரூ.10000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல் 11 கடைசி நாள் !

0
தேனியில் ரூ.10000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை
தேனியில் ரூ.10000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை

தேனியில் ரூ.10000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல் 11 கடைசி நாள் !

Counsellor மற்றும் DEO பணியிடங்களை நிரப்ப தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Counsellor – 01 பணியிடம், DEO of DCPU – 01 பணியிடம் மற்றும் DEO of CWC – 01 பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Counsellor எனும் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உளவியல் / சமூகவியல் பாட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் / குழந்தைகள் நலன் சார்புடைய பணிகளில் 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • DEO எனும் உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
  • Counsellor எனும் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Counsellor பணிக்கு ரூ.14000/- என்றும், DEO of DCPU பணிக்கு ரூ.10000/- என்றும், DEO of CWC பணிக்கு ரூ.9000/- என்றும், தேர்வாகும் பணிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு வாயிலாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி – 625 531 என்ற முகவரிக்கு 11.04.2022ம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Theni DCPU Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here