தமிழக அரசில் கணினி இயக்குபவர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.14,000/-

0
தமிழக அரசில் கணினி இயக்குபவர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.14,000/-
தமிழக அரசில் கணினி இயக்குபவர் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.14,000/-
தமிழக அரசில் கணினி இயக்குபவர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.14,000/-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, தேனி (DCPU) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Counsellor, DEO பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Child Protection Unit, Theni (DCPU)
பணியின் பெயர் Counsellor, DEO
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Theni DCPU காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Counsellor, DEO பணிக்கு கீழுள்ளவாறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Counsellor – 01 பணியிடம்
  • DEO of DCPU – 01 பணியிடம்
  • DEO of CWC – 01 பணியிடம்.
Theni DCPU கல்வித்தகுதி:

Counsellor எனும் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உளவியல் / சமூகவியல் பாட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் / குழந்தைகள் நலன் சார்புடைய பணிகளில் 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DEO எனும் உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

Theni DCPU வயது வரம்பு:

Counsellor எனும் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Theni DCPU ஊதிய தொகை:

இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Counsellor பணிக்கு ரூ.14000/- என்றும், DEO of DCPU பணிக்கு ரூ.10000/- என்றும், DEO of CWC பணிக்கு ரூ.9000/- என்றும், தேர்வாகும் பணிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

Theni DCPU தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு வாயிலாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

Theni DCPU விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து கீழே கொடுத்துள்ள முகவரிக்கு 11.04.2022ம் தேதிக்குள் தபால் அனுப்பவும்.

Theni DCPU விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தேனி – 625 531.

Theni DCPU Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!