நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு ‘தயான் சந்த் கேல் ரத்னா’ விருது – தேசிய விளையாட்டு விருதுகள் குழு!

0
நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு 'தயான் சந்த் கேல் ரத்னா' விருது - தேசிய விளையாட்டு விருதுகள் குழு!
நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு 'தயான் சந்த் கேல் ரத்னா' விருது - தேசிய விளையாட்டு விருதுகள் குழு!
நீரஜ் சோப்ரா உட்பட 12 பேருக்கு ‘தயான் சந்த் கேல் ரத்னா’ விருது – தேசிய விளையாட்டு விருதுகள் குழு!

ஒவ்வொரு ஆண்டும் இந்திய விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் தயான் சந்த் கேல் ரத்னா விருது இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேல் ரத்னா விருது

இந்தியாவில் கடந்த 1991-92ம் ஆண்டில் நிறுவப்பட்ட கேல் ரத்னா விருது தேசிய அளவிலான விளையாட்டுதுறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்றவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கேல் ரத்னா விருது கடந்த ஆண்டு வரை மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆண்டுக்கான விருதுகள் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் விடுமுறை – நவ.8 முதல் மீண்டும் திறப்பு!

இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் இவ்விருது பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.750,000 ரொக்கத் தொகையை உள்ளடக்கியது. இப்போது விளையாட்டுத் துறையில் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் விருது வழங்கப்பட உள்ளது.

அப்பாவான விஜய் டிவி பிரபலம் – வாழ்த்து மழையில் நனையும் ஜோடி!

அதே போல 35 தடகள வீரர்களுக்கு அர்ஜூனா விருது அளிக்க தேசிய விளையாட்டு விருதுகள் குழு பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில் விருதுகளை பெரும் வீரர்களின் பட்டியலில் நீரஜ் சோப்ரா, ரவிக்குமார், லவ்லினா, ஸ்ரீஜேஷ், மிதாலி ராஜ், மன்பிரீத் சிங், சுனில் சேத்ரி, அவனி லேகரா, பிரமோத் பகத், சுமித் அன்டில், கிருஷ்ணா நகர், மனிஷ் நார்வல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வரும் நவம்பர் 13ம் தேதியன்று டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கவுரவம் செலுத்தப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!