Daily Current Affairs March 7 & 8, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs March 7 & 8, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs March 7 & 8, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Daily Current Affairs March 7 & 8, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 & 08 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரை!!

  • குஜராத் கெவாடியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த, ஒருங்கிணைந்த ராணுவ கமாண்டர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • இந்த மாநாட்டின் போது, விவாதங்கள் பற்றி பிரதமருக்கு, முப்படை தலைமை தளபதி எடுத்துக் கூறினார்.
  • இந்த மாநாட்டின் அமைப்பு மற்றும் கொள்கைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.  இந்தாண்டு மாநாட்டில் அனைத்து பிரிவு அதிகாரிகளையும் சேர்த்ததை அவர் பாராட்டினார்.
  • தேசிய பாதுகாப்பு அமைப்பின் சிவில் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளிடம் பேசிய பிரதமர், கொவிட் தொற்று மற்றும் வடக்கு எல்லையில் நிலவிய சவாலான சூழலில், இந்திய பாதுகாப்பு படைகள் கடந்த ஓராண்டாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை வெகுவாக பாராட்டினார்.

மக்கள் மருந்தக தினம் 2021!!

  • தேசிய அளவில் “மக்கள் மருந்தக தினம் 2021 (“Janaushadhi Diwas”) கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. ஷில்லாங்கின் வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்த விழா நடைபெற்றது.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனா திட்டத்தின் மூலமாக பயனடைந்தவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அது மட்டும் அல்லாமல் இந்த திட்டம் மூலம் சாதித்தவர்களுக்கு விருதுகளையும் பிரதமர் வழங்கினார்.

குறிப்பு:

பிரதான் மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனா என்பது நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்குவதை தனது நோக்கமாக கொண்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி F 10 ராக்கெட் மார்ச் மாத இறுதியில் விண்ணில் ஏவப்படவுள்ளது!!

  • ஜிஎஸ்எல்வி F 10 ராக்கெட் மூலம் ஜிஐசாட் 1 செயற்கைகோளுடன் மார்ச் மாதத்தின் இறுதியில் விண்ணில் ஏவப்படவுள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்டு பணிகளுக்காக இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயற்கோள் இந்தியாவின் இஸ்ரோவில் இருந்து விண்ணில் பாயும் என்றும் விஞ்ஞானிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜிஐசாட் 1 2,262 கிலோ எடை கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளில் உள்ள 5 விதமான கேமரா மூலமாக மற்றும் தொலைநோக்கி மூலமாக புவிப்பரப்பை துல்லியமாக பார்க்க முடியும்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

மாநில நிகழ்வுகள்

மகளிர் தினத்திற்காக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ள புதுவித அறிவிப்புகள்!!

  • மார்ச் 8 ஆம் தேதி  மகளிர் தினத்தில் ஆந்திர அரசு பெண்களுக்கு மொபைல்கள் வாங்க 10% தள்ளுபடியை ஆந்திர அரசு அறிவித்தது.
  • மேலும் காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8 ஆம் தேதி விடுமுறையையும் அறிவித்துள்ளது.
  • மகளிர் தினத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த குறும்பட போட்டிகளையும் நடத்தவும், அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சுகாதார பரிசோதனைகள் நடத்தவும், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்தது.

ஆந்திரா பற்றி

தலைநகரம் – அமராவதி (சட்டமன்ற மூலதனம்)

முதல்வர் – ஜெகன்மோகன் ரெட்டி

ஆளுநர்- பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்

சர்வதேச நிகழ்வுகள்

பங்களாதேஷ் நாட்டில் செய்திமைப்பாளராக முதல் திருநங்கை நியமனம்!!

  • பங்களாதேஷ் நாட்டில் செய்தி வாசிப்பாளராக ஒரு திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவரை நியமித்துள்ளது.
  • உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு தாஷ்னுவ அனன் ஷிஷிர் என்ற அந்த திருநங்கை இன்று முதல் செய்திகளை வாசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மட்டுமின்றி அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நுஸ்ரத் மா என்ற இன்னொரு திருநங்கையினையும் பொழுதுபோக்கு செய்திகளை வாசிக்கும் செய்தி வாசிப்பாளராக நியமித்துள்ளது.

பங்களாதேஷ் பற்றி

தலைநகரம் – டாக்கா

நாணயம் – பங்களாதேஷ் தக்கா

ஜனாதிபதி – முகமது அப்துல் ஹமீத்

பிரதமர் – ஷேக் ஹசினா

Download TNPSC Notification 2021 

2023 ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது!!

  • வரும் 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனை இந்தியா பங்களாதேஷ், நேபால் உட்பட 70 தேசங்கள் வழிமொழிந்துள்ளன.
  • இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நாடுகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
  • பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கவும், சர்வதேச சந்தையில் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பற்றி

தலைவர் – அன்டோனியோ குடெரெஸ்

தலைமையகம் – நியூயார்க்

நிறுவகிக்கப்பட்டது – 1945

விருதுகள் மற்றும் பட்டியல்கள்

எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாப்பாளர் விருது 2021!!

  • தமிழகத்தில் ஒவ்வொரு அபியும் பாரம்பரிய முறையில் நெல் பரியிட்டு அறுவடை செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க “எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாப்பாளர் விருது” வழங்கப்பட்டு வருகின்றது.
  • இந்த விருதினை வழங்குவதன் மூலம் பாரம்பரிய முறையில் நெல் பயிரிடும் முறை ஆதரிக்கப்படும் என்றும் நம்பப்படுகின்றது.
  • இந்த விருது மூன்று பேருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு முதல் பரிசினை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சத்யப்பிரகாஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இரெண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தினை சேர்ந்த வேல்முருகன் மற்றும் சிவராமன் என்பவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு!!

  • கியூ.எஸ் சர்வதேச அமைப்பு இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தமாக 12 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது. அதில் வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இடம் பிடித்துள்ளது.
  • இந்த பட்டியல் குவாக் குவரெலி சைன்ட்மென்ட்ஸ் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த பட்டியல் ஒரு கல்வி நிறுவனத்தின் கல்வித்தரம், மாணவர் – ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள் மற்றும் மாணவர்கள் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் 50 இடங்கள் அதிகமாக முன்னேறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய துணை தலைவராக நியமனம்!!

  • பெடரல் ரிசர்வ் வங்கியின் இந்திய நிறுவனம் தனது துணை தலைவர் மற்றும் முதன்மை அலுவலராக நாவூரின் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் நிதித்துறையினை கவனித்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர்கள் குழுமம் இவரது நியமனத்தை உறுதி செய்துள்ளது. இவரது பதவிக்காலம் வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாவூரின் ஹாசன் தற்போது Morgan Stanley Wealth Management நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

சிராக் பெயின்ஸ் & ப்ரோனிதா குப்தா அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு உதவியாளர்களாக நியமனம்!!

  • அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் குற்றவியல்துறையின் சிறப்பு உதவியாளர்களாக இந்திய வம்சாவளியினை சேர்ந்த சிராக் பெயின்ஸ் & ப்ரோனிதா குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • கொரோனா காலத்திற்காக கூடுதல் உதவிக்காக 20 பேர் பணியமிக்கப்பட்டதை அடுத்து, இவர்கள் இருவரும் தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஜோ பைடன் தலைமையிலான அரசு தற்போது வரை இந்திய வம்சாவளியினை சேர்ந்த 55 நபர்களை வெவ்வேறு துறைகளில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா பற்றி

தலைநகரம் -வாஷிங்டன்

ஜனாதிபதி- ஜோ பிடன்

நாணயம்- அமெரிக்க டாலர்

விளையாட்டு நிகழ்வுகள்

சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் தங்க பதக்கம் வென்றுள்ளார்!!

  • சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகட் தங்கம் வென்றுள்ளார். வினேஷ் போகட் மகளிருக்கான 53 கிலோ பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலமாக தரவரிசையில் உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற இடத்தையும் பெற்றுள்ளார்.
  • இறுதி சுற்றில் வினேஷ் கனடா நாட்டின் வீராங்கனையான டயானாவை 4 – 0 என்ற கணக்கில் வீழ்த்தினார். கடந்த வாரத்தில் நடைபெற்ற கீவில் நடைபெற்ற போட்டியிலும் அவர் தங்கம் வென்றிந்தது குறிப்பிடத்தக்கது.
  • இதன் காரணமாக சர்வதேச பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!