இந்தியாவில் அதிக ஏழைகள் உள்ள மாநிலம் பீகார் – Daily Current Affairs 27 November 2021!

0
இந்தியாவில் அதிக ஏழைகள் உள்ள மாநிலம் பீகார் - Daily Current Affairs 27 November 2021!
இந்தியாவில் அதிக ஏழைகள் உள்ள மாநிலம் பீகார் - Daily Current Affairs 27 November 2021!

இந்தியாவில் அதிக ஏழைகள் உள்ள மாநிலம் பீகார் – Daily Current Affairs 27 November 2021!

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்
  • தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவிவரும் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ்.
  • இது தற்போதைய வைரசை காட்டிலும் 40 விதமான மரபணு மற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும் இது தடுப்பூசியின் திறனை 40 சதவீதம் வரை குறைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிக ஏழைகள் உள்ள மாநிலம் பீகார்
  • நிதி ஆயோக் வெளியிட்டுள்ள வறுமைக்குறியீட்டு பட்டியலின் முதலிடத்தில் பீகார் மாநிலம் உள்ளது.
  • பீகாரில் இருக்க கூடிய மக்களில் நூற்றுக்கு 51.91% பேர் ஏழைகளாக உள்ளனர்.
  • சுகாதாரம், கல்வி, வாழ்க்கை தரம் இத்தகைய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலங்கள்-ஏழைகளின் சதவீதம்

1) ஜார்கண்ட்- 42.16%

2) உத்திர பிரதேசம்- 37.79%

3) கேரளம்- 0.71%

இந்தியாவில்  5 ஜி சோதனை
  • வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சோதனையை இந்தியாவில் நேற்று நடத்தியது. இதன் வேகம் 4.2Gbps வரை எட்டியது.
  • இந்த வோடபோன் ஐடியா நிறுவனமானது எரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புனேயிலும், நோக்கியாவுடன் இணைந்து காந்தி நகரிலும் இந்த 5ஜி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தோ-பிரான்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி
  • “Ex SHAKTI- 2021″ என்று அழைக்கப்படும் இந்தோ – பிரான்ஸ் கூட்டு இராணுவப் பயிற்சியின் 6வது பயிற்சி முகாம், பிரான்சில் நவம்பர் 26, 2021 அன்று நிறைவடைந்தது.
  • இந்த முகாமில் களப்பயிற்சி, கடின பணிச்சூழல் பயிற்சி, எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
  • கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.
  • ஏர்பபுள் திட்டத்தின் அடிப்படையில் அவசர கால விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
  • இதனையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நாடுகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!