ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 09, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 09, 2019

  1. மத்தியப் பிரதேசத்தில், ஆறு சுத்தமான நகரங்களின் அனைத்து சுத்திகரிப்பு ஊழியர்களுக்கும் தங்கள் சிறந்த பணிக்கு கௌரவமாக 5000 ரூபாய் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
  2. பிரசார் பாரதி மேலும் 11 மாநிலங்களில் டி.டி.சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது,
  3. அகால மரணம் மற்றும் மருத்துவ காப்பீடு தொடர்பான கவலைகளை தீர்க்க நாடு முழுவதும் உள்ள வக்கீல்கள் நலனுக்காக ஒரு விரிவான காப்பீடு திட்டத்தை பரிந்துரைக்க சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்ட அமைச்சகத்தின் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது
  4. பிரதமர் லக்னோ மற்றும் கஜியாபாத் நகரங்களில் மெட்ரோ திட்டத்தை துவக்கி வைத்தார் ரயில்களில் பெண்களுக்கான தனிப்பெட்டி அமைக்கும் திட்டத்தை இலங்கை அரசுதுவங்கியது
  5. பின்லாந்து பிரதமர் ஜூஹா சிபிலாவின் மத்திய வலதுசாரி அரசு பாராளுமன்றத் தேர்தலுக்கு ஐந்து வாரங்கள் முன்னதாக ராஜினாமா செய்துள்ளது.
  6. உலகின் மிக வயதான வாழும் நபராக 116 வயதான ஜப்பானிய பெண் கேன் தனகா அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
  7. பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் அஜய் பிசாரியா இஸ்லாமாபாத் திரும்புவார் என்று வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  8. புதுடில்லியில் இந்தியா-ஜப்பானின் முதல் விண்வெளி பேச்சுவார்த்தை நடைபெற்றது
  9. மத்திய வங்கி,ஏடிபி வங்கி 26 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம்
  10. 390 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை அரசு 87 % வரை குறைத்துள்ளது
  11. அயோத்தி நில வழக்கிற்கு மூன்று உறுப்பினர்கள் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது
  12. USSOCOM தளபதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தை சந்திப்பு
  13. இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் டி20 தொடர், இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
  14. பர்மிங்ஹாமில் நடைபெற்ற அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஷிப் – பேட்மின்டன் போட்டியில் சாய்னா நேவால் 15-21, 19-21 என்ற செட் கணக்கில் தாய் ட்சூ யிங்கிடம் தோல்வி அடைந்தார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!