ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 24, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 24, 2019

  • மத்திய அறிவியல் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மரபுசார்ந்த கோளாறுகளின் மேலாண்மை மற்றும் சிகிச்சையின் தனித்துவமான முறைகள் என்ற யு.எம்.எம்.ஐ.டி முன்முயற்சியைத் தொடங்கினார் மற்றும் நிடான் (தேசிய மரபு சார்ந்த நோய்கள் நிர்வாகம்) கேந்த்ராக்களையும் திறந்து வைத்தார்.
  • பிரதமர் ஜன ஆரோக்ய யோஜ்னாவின் முதல் ஆண்டு விழாவை செப்டம்பர் 23 அன்று ஆயுஷ்மான் பாரத் தினமாக உத்தரபிரதேசம் கொண்டாடியது.
  • லக்னோவிலிருந்து டெல்லிக்கு செல்லும் நாட்டின் முதல் கார்ப்பரேட் ரயிலான “தேஜாஸ் எக்ஸ்பிரஸ்” உத்தரபிரதேசத்தில், அக்டோபர் 4 ஆம் தேதி இயங்க  தயாராக உள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுமார் 950 மிமீ (3 அடிக்கு மேல்) நீளமும் மற்றும் 20 மிமீ அகலம் கொண்ட ராட்சச மண்புழு காணப்பட்டது.
  • அரேபிய கடலில் காற்றழுத்தம் காரணமாக ‘ஹிகா’ என்ற சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது, இந்த புயல் செப்டம்பர் 25 அதிகாலைக்குள் ஓமான் கடற்கரையை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
  • சக்திவாய்ந்த சூறாவளியான “தபா” தென் கொரியாவின்  தெற்கு பகுதியை தாக்கியது, இதனால் 26 பேர் காயமடைந்து சுமார் 27,790 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
  • அமைச்சர்கள் ஸ்ரீ நிதின் கட்கரி மற்றும் ஸ்ரீ ஆர்.கே.சிங் ஆகியோர் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான எரிசக்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டனர் மேலும் ஆற்றல் திறன் பணியகத்தின் எம்எஸ்எம்இ திட்டத்தின் கீழ் அறிவு மேலாண்மை போர்ட்டலான ““SIDHIEE”” யும் தொடங்கி வைத்தனர்.
  • புது தில்லியில் எம்.எஸ்.எம்.இ துறையில் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவதற்கான தேசிய மாநாட்டை ஸ்ரீ நிதின் கட்கரி மற்றும் ஸ்ரீ ஆர்.கே.சிங் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
  • காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், 2019 காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டை 23 செப்டம்பர் 2019 அன்று காலநிலை சவாலை எதிர்கொள்ள ஏற்பாடு செய்தார்.
  • அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, லிவர்பூல் வீரர் “விர்ஜில் வான் டிஜ்க்” மற்றும் ஐந்து முறை சிறந்த ஃபிஃபா வீரர் விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை வீழ்த்தி ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரருக்கான விருதை ஆறாவது முறையாக வென்று சாதனைப்படைத்துள்ளார்
  • இளம் இந்திய ஷட்லர் மால்விகா பன்சோட், மியான்மரின் தெட் ஹ்தார் துசாரை வீழ்த்தி மாலத்தீவு சர்வதேச எதிர்காலத் தொடரை வென்றார், இது அவரது முதல் பட்டமாகும் .

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் –  24, 2019 video – Click Here

 

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!