Daily Current Affairs February 27,28 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 27,28 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27 மற்றும் 28 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

பெரும்பாக்கத்தில் புதிய தபால் நிலையம்!!

  • பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, அங்கு புதிய துணை தபால் நிலையம் ஒன்றை மார்ச் 1 அன்று தபால் துறை திறக்க இருக்கிறது.
  • பெரும்பாக்கம் பஞ்சாயத்து மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 71,000 மக்களுக்கு இந்த புதிய தபால் நிலையம் சேவையாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மண்டல தலைமை தபால் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், சென்னை மண்டலத்தின் தபால் சேவைகள் இயக்குநர் கே சோமசுந்தரத்தின் முன்னிலையில் பெரும்பாக்கம் தபால் நிலையத்தை திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் சார்பாக ஆஸ்திரேலியா தூதர் நியமனம்!!

  • நமது நாட்டிற்காக மெச்சிகோவில் தூதராக செயல்பட்டு வரும் மன்ப்ரீத் வொக்ரா தற்போது ஆஸ்திரேலியாவிற்குமான தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஐஎப்எஸ் என்று கூறப்படும் இந்திய வெளியுறவுத்துறையில் இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு அதிகாரியாக இணைத்து பணிபுரிந்துள்ளார்.
  • இவரை தற்போது ஆஸ்திரேலியாவிற்கான தூதராக நியமிக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ரஷ்யா செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது!!

  • ஆர்டிக் கண்டத்தில் நிலவும் சுற்றுசூழல் மாற்றத்தினை கண்காணிக்க என்று ரஷ்யா அரசின் விண்வெளித்துறை புதிதாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் ஆர்டிக் கண்டத்தில் ஒரு பனிப்பாறை உருகும் காட்சி வைரலாக பரவியது. இதனை அடுத்து ரஷ்யா அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
  • கஜகஸ்தான் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் நேராக புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா பற்றி

தலைநகரம் – மாஸ்கோ

அதிபர் – புதின்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

நியமனங்கள்

பஞ்சாப் முதல்வரின் ஆலோசராக பிரஷாந்த் கிஷோர் என்பவர் நியமனம்!!

  • பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரபல அரசியல் வியூகர் பிரஷாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருப்பவருக்கு மாதம் 1 ரூபாயுடன் கூடிய கேபினட் அமைச்சர் அந்தஸ்து கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

2வது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டு போட்டியை பிரதமர் திறந்து வைத்தார்!!

  • இரண்டாவது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டு நிகழ்ச்சியில்,  பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் துவக்கவுரையாற்றினார்.
  • குளிர்கால விளையாட்டு போட்டியில், இந்தியா தீவிரமாக இருப்பதுடன், ஜம்மு காஷ்மீரை முக்கிய இடமாக மாற்றுவதில், இது முக்கியமான நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.

சர்வதேச மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வென்றார்!!

  • சர்வதேச மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
  • உக்ரைனில் நடந்த 3 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 2017-ம் ஆண்டு உலக சாம்பியனான கலாட்ஜின்ஸ்காயுடன் (பெலாரஸ்) மோதினார்.
  • வினேஷ் போகத் முடிவில் 10-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மல்யுத்த போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

சர்வதேச குத்துசண்டை போட்டியில் இந்திய வீரர் வெள்ளி வென்றார்!!

  • சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளி வென்று இறுதி சுற்றிற்கு முன்னேறியுள்ளார். பல்கெரியாவில் 72 வது சர்வதேச குத்துச்சண்டை போட்டி தொடர் நடைபெற்று வருகின்றது.
  • இதில் ஆண்களுக்கான 72 கி.கி போட்டியில் தான் இந்திய வீரர் தீபக் வெள்ளி வென்றுள்ளார். அவர் இந்த போட்டியில் வென்றுள்ளதாக அவர் இறுதி சுற்றிருக்கும் செல்ல உள்ளார்.

Download TNPSC Notification 2021 

முக்கிய நாட்கள்

அரிய நோய்கள் தினம் 2021!

  • மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • ஏனென்றால், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பிப்ரவரி 29-ந்தேதி வருவதால் அரிய நோய் தினத்துக்கு இந்நாள் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி 28-ந்தேதி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் படி 1000-ல் ஒருவருக்கு வந்தால், அது அரிய நோயாகும் என்று கணக்கிடப்படுகிறது.

மரணங்கள்

கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்!!

  • உடல்நலக்குறைவு காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம் அடைந்தார். அவருடைய உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் 27 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.
  • கடந்த 24-ந்தேதி சிறுநீரக கோளாறு பிரச்சினையால் அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!