Daily Current Affairs February 21 & 22 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21 & 22 பிப்ரவரி 2021
தேசிய நிகழ்வுகள்
இந்தியன் இன்ஸ்டிடியூட் கொரோனா நோயாளிகளுக்கான “அனம்நெட்” என்ற கருவியினை தயாரித்துள்ளது!!
- பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் கொரோனா நோயாளிகளின் நுரைஈரலில் உள்ள நோய் தாக்கத்தினை கண்டறிய ஒரு புதிய வகை கருவியினை கண்டுபிடித்துள்ளது. அதற்கு “அனம்நெட்” என்று பெயரிட்டுள்ளது.
- இந்த கருவி நோயாளியின் நுரைஈரலில் ஏற்பட்டுள்ள அசாதாரணங்கள் குறித்து எளிமையாக கண்டுபிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- சிங்கப்பூர் சிஇஓ மன்றத்தில் மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் உரை!!
- மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இந்தியா- சிங்கப்பூர் சிஇஓ மன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
- இந்தியா, சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு தரப்பிலும் வர்த்தகங்களை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்த அவர், நமது வலுவான கூட்டணி மேலும் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- தற்சார்பு அடைவதற்கு உதவும் வகையிலும், சர்வதேச அளவில் தடம் பதிப்பதற்கு ஏதுவான வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த கூட்டணி உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு மென்பொருள் சார்ந்த வானொலி தொலைத்தொடர்பு கருவி உருவாக்கம்!!
- அனைத்து இராணுவ செயல்பாடுகளுக்கும் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். அந்த வகையில் போரின் போது இந்திய ராணுவ வீரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள சி என் ஆர் என்று அழைக்கப்படும் கம்பாட் நெட் ரேடியோ என்ற வானொலி சாதனத்தை பயன்படுத்துவர்.
- பாரம்பரிய சி என் ஆர் கருவியின் வாயிலாக குரல் வழியான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.
- மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதுபோன்ற மிக உயரிய அதிர்வெண் கொண்ட மென்பொருள் வானொலியின் பயன்பாடு இந்திய ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்திய ராணுவம் பற்றி
தலைவர் – ராம் நாத் கோவிந்த்
நிறுவகிக்கப்பட்டது – 1895
தலைமையகம் – புது டெல்லி
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021
முதலீடு செய்வதில் சிறந்து விளங்கும் பொதுத்துறை நிறுவனத்துக்கான விருதை டிரைஃபெட் வென்றது!!
- உலக தலைமைத்துவ அமைப்பு மற்றும் விருதுகளின் 19-வது சர்வதேச பதிப்பு மற்றும் நான்காவது இந்திய பதிப்பில் நிர்வாக இயக்குநர் பிரவிர் கிருஷ்ணா தலைமையிலான இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைஃபெட்) நான்கு விருதுகளை வென்றது.
- மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வருடத்திற்கான வர்த்தக தலைமைக்கான (பிஸினஸ் லீடர்) விருதை தி எக்கனாமிக் டைம்ஸ் வழங்கியது.
- சிறந்த தலைமை செயல் அதிகாரி, இவ்வருடத்தின் சிறந்த வியாபார நிர்மாணிப்பாளர் (பிராண்ட் பில்டர்) மற்றும் சிறந்த தொழில்முனைவோர் ஆகிய மூன்று விருதுகளை பிரவிர் கிருஷ்ணா வென்றார்.
பழங்குடியினர் அமைச்சகம் பற்றி
நிறுவகிக்கப்பட்டது – 1999
தலைவர் – அர்ஜுன் முண்டா
தலைமையகம் – புது டெல்லி
மாநில நிகழ்வுகள்
கேரளாவில் “உற்சவம் 2021″ திருவிழா நடைபெற்றது!!
- கேரளா மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் “உற்சவம் 2021” திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழா தொடர்ந்து 7 நாட்கள் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநிலத்தின் கலாச்சாரம், பண்பு மற்றும் வகைவகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- இந்த விழா மூலமாக பழங்கால பழக்கவழக்கங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா பற்றி
தலைநகரம் – திருவனந்தபுரம்
முதல்வர் – பினராயி விஜயன்
ஆளுநர் – ஆரிப் முஹமத் கான்
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியா இந்தோனேஷியாவின் “PASSEX” என்ற கடற்படை பயிற்சி நடைபெற்றது!!
- இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் கடற்படை “PASSEX” என்ற பெயரில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி அரபி கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சி மூலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமை பலம் பெரும் என்று நம்பப்படுகிறது.
- இந்தியாவின் கப்பலான “INS Talwar” மற்றும் இந்தோனேஷியாவின் “KRI Bung Tomo” இந்த பயிற்சியில் ஈடுபட்டது.
இந்தோனேஷியா பற்றி
தலைநகரம் – ஜகார்த்தா
நாணயம் – ரூபாய்
அதிபர் – ஜோகோ விடடோ
Download TNPSC Notification 2021
மரணங்கள்
தேசிய விருது பெற்ற மலையாள இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ் மரணம்!!
- பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளராக ஐசக் தாமஸ் தனது 72 வது வயதில் மரணம் அடைந்துள்ளார். மலையாள திரைப்படங்கள் பலவற்றிற்கும் இவர் இசை அமைத்துள்ளார். இவர் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.
- மாரடைப்பு காரணமாக இவர் மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
இலங்கை வீரர் தமிகா பிரசாத் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!!
- இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தமிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- இவர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் 25 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
பிலிப் ஐலண்ட் ட்ரோபியை அங்கிதா ஜோடி வென்றுள்ளது!!
- டென்னிஸ் போட்டியான பிலிப் ஐலண்ட் ட்ரோபியை இந்தியாவின் அங்கிதா மற்றும் ரஷ்யாவின் காமிலா வென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பெண்கள் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றுள்ளனர்.
- அங்கிதா முதன் முறையாக இந்த போட்டியில் வென்றுள்ளார்.
- இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
- இந்தியாவில் இருந்து சானியா மிர்ஷாவிற்கு பிறகு மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறும் இரண்டாவது வீராங்கனையாக அங்கிதா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
மனித உரிமைகள் பேரவைவின் ஆலோசனைக் குழுவின் தலைவராக அஜய் மல்ஹோத்ரா நியமனம்!!
- இதன் மூலமாக மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அஜய் மல்ஹோத்ரா பெற்றுள்ளார்.
- மல்ஹோத்ரா முன்னர் ரஷ்யா, குவைத், தூதர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ருமேனியாவின் துணை நிரந்தர பிரதிநிதியாக கடந்த 003 முதல் 2005 வரை பணியாற்றியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவை பற்றி
நிறுவகிக்கப்பட்டது – 2006
தலைவர் – நசாத் ஷாமின்
தலைமையகம் – ஸ்விசர்லாந்து
Download CA Pdf
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




