Daily Current Affairs February 17, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
தினசரி நடப்பு நிகழ்வுகள் - 17 பிப்ரவரி 2021
தினசரி நடப்பு நிகழ்வுகள் - 17 பிப்ரவரி 2021

Daily Current Affairs February 17, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

இந்திய சைகை மொழி அகராதியின் 3ம் பதிப்பு வெளியீடு!!

  • இந்திய சைகை மொழி அகராதியின் 3ம் பதிப்பை மத்திய சமூக நீதிதுறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
  • இதில் ஏற்கனவே உள்ள 6,000 விதிமுறைகளுடன் கூடுதலாக 10,000 விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளனஇந்த அகராதியை, இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Indian Sign Language Research and Training Centre (ISLRTC) தயாரித்துள்ளது.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிராந்திய சைகைகளும் இந்த அகராதியில் உள்ளன.

கண்டோன்மெண்ட் வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு ஆன்லைன் சேவைகளுக்கான இணையதளம் துவக்கம்!!

  • இ-சவானி இணையதளத்தையும், செயலியையும் இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.
  • நாடு முழுவதும் உள்ள 62 கண்டோன்மெண்ட் வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு ஆன்லைன் மூலம் உள்ளாட்சி சேவைகளை வழங்குவதற்காக இந்த இணையதளம் (https://echhawani.gov.in/) உருவாக்கப்பட்டுள்ளது.
  • குத்தகைகளைப் புதுப்பித்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், தண்ணீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள், வர்த்தக உரிமங்கள், நடமாடும் கழிப்பறைகளை கண்டறிதல், பல்வேறு வகையான வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்துதல் ஆகியவற்றை தற்போது மிகவும் எளிதாக இத்தளத்தின் மூலம் செய்ய முடியும்.

பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்திக்கு 34 ஆயிரம் கோடி முதலீடு!!

  • 11வது உலக பெட்ரோலிய கரி மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொருள் மாநாட்டில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
  • பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்திக்கு, சுத்திகரிப்பு ஆலைகளை  மேம்படுத்த  ரூ.34 ஆயிம் கோடியை எண்ணெய் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
  • வாகன மாசைக் குறைக்க, கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் – 6 தொழில்நுட்பத்துக்கு, இந்தியா பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
  • பிஎஸ் – 6 விதிமுறைகள், யூரோ-6 விதிமுறைகளுக்கு நிகரானது என்று கூறப்படுகிறது.
  • இதன் மூலம் காற்றில் கந்தக அளவு குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

சர்வதேச நிகழ்வுகள்

ரஷ்யா தனது “Progress MS-16” என்ற சரக்கு விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது!!

  • ரஷ்யா முதன் முறையாக தனது முதல் பலதரப்பட்ட சரக்குகளுடன் கூடிய விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது. இதனை அந்த நாட்டின் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவியுள்ளது.
  • கஜகஸ்தானில் ரஷ்யா-குத்தகைக்கு எடுத்த பைக்கோனூர் ஏவுதளத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த விண்கலம் தண்ணீர் உட்பட பல பொருட்களையும் விண்வெளிக்கு எடுத்து சென்றுள்ளது.

ரஷ்யா பற்றி

தலைநகரம் – மாஸ்கோ

பிரதமர் – புடின்

மரியோ டிராகி இத்தாலியின் புதிய பிரதமராக பதவியேற்பு!!

  • “சூப்பர் மரியோ” என்று அழைக்கப்படும் மரியோ டிராகி தனது 73 வயதில் இத்தாலி நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
  • மரியோ டிராகி ஐரோப்பிய வங்கியின் முன்னாள் தலைவர் ஆவார். பொது முடக்கம், கொரோனா பரவல், பெரும் தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் ஆகியவையால் இத்தாலி அரசு பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • இவரது பதிவியேற்பு மூலமாக நாடு பழைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலி பற்றி

தலைநகரம் – ரோம்

பிரதமர் – மரியோ டிராகி

குடியரசு தலைவர் – செர்ஜியோ மட்டரெல்லா

மாநில நிகழ்வுகள்

அசாமில் பிப்ரவரி 18 ஆம் தேதி பிரதமர் `மஹாபாகு-பிரம்மபுத்ரா’ திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்!!

  • அசாமில் பிப்ரவரி 18 ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி `மஹாபாகு-பிரம்மபுத்ரா’ திட்டத்தைத் தொடங்கி வைத்து, தூப்ரி புல்பாரி பாலத்துக்கு அடிக்கல் நாட்டி, மஜுலி பாலத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்கிறார்.
  • இந்த நிகழ்வு காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சாலை வழியாகச் செல்லும் நேரத்தை குறைப்பதற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. அதே போல் சிறுதொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணு சாதனங்களின் உற்பத்தியை சென்னையில் துவக்குகிறது அமேசான்!!

  • மத்திய மின்னணுத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அமேசான் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணைத் தலைவருமான அமித் அகர்வாலுடன் காணொலி வாயிலான கூட்டத்தில் கலந்து கொண்டார்.
  • முதலாவதாக, அலைபேசியை தொலைக்காட்சியுடன் இணைக்கும் கருவியான அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
  • சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தைச் சேர்ந்த கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி என்ற உற்பத்தியாளருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது உற்பத்தியை அமேசான் நிறுவனம் துவக்கும்.
  • உள்நாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூடுதலான சந்தைப் பகுதிகள்/ நகரங்களில் செயல் திறனை அதிகரிப்பதற்கான மதிப்பிடுதலை அமேசான் தொடர்ந்து மேற்கொள்ளும்.

Download TNPSC Notification 2021 

நியமனங்கள்

புதுச்சேரி கவர்னராக தமிழிசை சௌந்தராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!!

  • புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக இருந்து வந்த கிரண் பேடி திடீர் என்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  • அவருக்கு பதில் அந்த கூடுதல் பொறுப்பினை தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக இருந்து வரும் தமிழிசை சௌந்தராஜன் பார்த்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிரண் பேடிக்கும் மாநில அரசிற்கும் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமனம்!!

  • மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக கடந்த 6 ஆண்டுகள் இருந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பதவிக் காலம் கடந்த 15-ம் தேதியோடு முடிந்தது.
  • கார்கே வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வங்கி நிகழ்வுகள்

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு என்று “IndOASIS” என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது!!

  • இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கியை இணைக்கும் தகவல் தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் அனைத்துக் கிளைகளிலும் முடிந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து கடந்த 12ம் தேதி முதல் 15-ம் தேதிவரை அலகாபாத், இந்தியன் வங்கி தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டன.
  • இதனை அடுத்து தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு என்று வங்கி சார்பில் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கி பற்றி

எம்.டி & சி.இ.ஓ – பத்மஜா

தலைமையகம்- சென்னை

விளையாட்டு நிகழ்வுகள்

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் ஓய்வு!!

  • தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணி வீரருமான டூப்பிளசிஸ் சர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.
  • அடுத்து வரும் இரு டி20 உலகக்கோப்பை மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
  • கடந்த 2012-13ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டூப்பிளசிஸ் அறிமுகமானார்.

Download CA 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!