மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அமைச்சரவை செயலாளருடன் விவாதம் மேற்கொண்டு, ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்த முடிவு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

DA நிலுவைத்தொகை

தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 31% அகவிலைப்படி (DA) தொகை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் இது குறித்த விவகாரம் ஹோலி அன்று விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்வு – மத்திய அரசின் அறிவுறுத்தல்! பொதுமக்கள் அதிர்ச்சி!

இப்போது 18 மாத DA நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்படும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில் 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி தொகை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இப்போது JCM தேசிய கவுன்சில் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA பாக்கிகளை ஒரு முறை செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2 & 2A அறிவிப்பு 2022 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன் | உடனே பாருங்க..!

இந்த கோரிக்கைகளின் படி, DA தொகை ஒரே தவணையாக கொடுக்கப்பட்டால் நிலை-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். அதேசமயம், நிலை-13 அல்லது நிலை-14 ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை செலுத்தப்படும். உண்மையில், நிலை 1 ஊழியர்களின் அகவிலைப்படி தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். மறுபுறம், நிலை 13 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரையும், நிலை 14 ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையும் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.

DA பாக்கி:

குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1800 (நிலை-1 அடிப்படை ஊதிய அளவு 18000 முதல் 56900 வரை) உள்ள மத்திய ஊழியர்களுக்கு DA தொகை ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6] என இருக்கும். 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச தர ஊதியத்தில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{3 சதவீதம் 18,000}x6] DA நிலுவைத் தொகையைப் பெறுவார்கள். அதே நேரத்தில், ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட DA நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{4 சதவீதம் ரூ. 18,000}x6] ஆக இருக்கும். இதன் மூலம் ஊழியர்களுக்கு மொத்த DA தொகை [{4 சதவீதம் ₹56,900}x6] ரூ.13,656 ஆக இருக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!