தமிழக மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ஊரடங்கில் அதிகரித்த சைபர் குற்றங்கள்!

0
தமிழக மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை - ஊரடங்கில் அதிகரித்த சைபர் குற்றங்கள்!
தமிழக மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை - ஊரடங்கில் அதிகரித்த சைபர் குற்றங்கள்!
தமிழக மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ஊரடங்கில் அதிகரித்த சைபர் குற்றங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 55 சதவீதம் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவேடு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சைபர் கிரைம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக மக்களை உலுக்கி வருகிறது. கொரோனா அதிகரித்ததால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மக்கள் தினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்றப்பட்டது. மக்கள் பலர் அலுவலகம் செல்லாமல் வீடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.

TNPSC போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வாணையத்தின் அறிவுறுத்தல்கள்!

மக்கள் வாழ்க்கை ஆன்லைனில் முடங்கி விட்டதால் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்றப் பதிவேடு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி வங்கி கணக்கு தகவல்களை கேட்பது உள்ளிட்ட பல சைபர் குற்றங்கள் தினமும் நடைபெற்று வருவதாக மதுரை ஜியோமியோ இன்பர்மேட்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் தினேஷ் பாண்டியன் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்தாண்டு சைபர் குற்றங்கள் அதிகம் நடந்த நகரங்களில் சென்னை முக்கிய இடத்தில் இருக்கிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டு மூலமாக 18 வயதிற்கு குறைவானவர்கள் பலர் ஏமாந்து இருக்கிறார்கள். ஆன்லைனில் விளையாடும் போது வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே போன்ற ஏதாவது ஒரு வழியில் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அடுத்தடுத்து மாணவர்களுக்கு இழந்த பணத்தை மீட்கலாம் எனக்கூறி மூளைச்சலவை செய்து வங்கி கணக்கில் இருந்து முழுவதும் பணத்தை திருடி விடுவதாக தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூட மதுரை மாணவி ஒருவரால் பெற்றோர் வீடு கட்ட சேமித்து வைத்திருந்த ரூ.7 லட்சம் பறிபோனது. அதேபோல் வாட்ஸ்அப், டெலிகிராமில் நாம் ஏதாவது ஒரு குழுவில் இருப்போம்.

தமிழகத்தில் அக்.23 முதல் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம் – சுபமுகூர்த்த நாட்கள் எதிரொலி!

அதில் யாராவது ஒருவர் தனியாக பழகி உங்களிடம் பணம் பறிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார் அல்லது அவரே நாளடைவில் அந்தரங்க விஷயங்களை பேசி உங்களிடம் மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது. அவர்களில் 10 சதவிகிதம் பேர் புகார் அளிக்க முன்வரவில்லை. தமிழகத்தில் இவ்வகை குற்றமும், பணத்திருட்டு குற்றமும் அதிகமாக நடக்கிறது. சமீப காலமாக ஆன்லைனில் லோன், கிரெடிட் கார்டு என நம்மை மோசடி செய்ய பலரும் பலவிதமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நம் விபரங்கள் பல இடங்களில் பரவி கிடக்கிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!