‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கியின் முதல் திரைப்படம் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
'குக் வித் கோமாளி' ஷிவாங்கியின் முதல் திரைப்படம் - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
'குக் வித் கோமாளி' ஷிவாங்கியின் முதல் திரைப்படம் - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கியின் முதல் திரைப்படம் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் ஷிவாங்கி. இவர் தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் முதல்முறையாக ‘காசே தான் கடவுளடா’ பட ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஷிவாங்கி:

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானவர் ஷிவாங்கி. இவரது அம்மா ஒரு பாடகி அதனால் இவரும் தனது பாடல் திறமையை காட்ட வேண்டும் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவருக்கு எதிர்பார்த்த அளவு ரீச் இல்லை. ஆனால் அவரின் குழந்தை தனமான நடவடிக்கை காரணமாக அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவரது சுட்டித்தனம் மக்களுக்கு பிடித்துப்போய் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

விஜய் டிவியின் ஸ்டார் கிட்ஸில் அழுது புலம்பல் – உண்மையா? நடிப்பா? குவியும் கமெண்ட்ஸ்!

அவரை வீட்டில் ஒருவராக பார்க்கும் அளவு ரசிகர்கள் பெருகினர். குறிப்பாக அவரும் புகழும் இணைந்து செய்யும் லூட்டிக்கு அளவே இல்லாமல் இருந்தது. இப்படியான நிலையில் அந்த ஷோ முடிந்த பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. தற்போது இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இனி வரும் நாட்களில் டிவி நிகழ்ச்சிகளிலிருந்து சற்று தள்ளி இருக்கலாம் என இவர் முடிவு செய்துள்ளாராம். தொடர்ந்து வெள்ளித்திரையில் வந்துகொண்டு இருக்கும் வேலையில் சின்னத்திரையிலும் பயணித்தால் அது தன் கேரியரை பாதிக்கும் என முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் காசேதான் கடவுளடா படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் இவருடன் காமெடி நடிகர் மனோ பாலாவும் இருக்கிறார். அதனால் மனோவும் இந்த படத்தில் இருக்கிறாரா? அப்போ காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!