‘குக் வித் கோமாளி’ சீசன் 3 படப்பிடிப்பு கொரோனாவால் திடீர் நிறுத்தம்? வெளியான ஷாக் தகவல்!

0
'குக் வித் கோமாளி' சீசன் 3 படப்பிடிப்பு கொரோனாவால் திடீர் நிறுத்தம்? வெளியான ஷாக் தகவல்!
'குக் வித் கோமாளி' சீசன் 3 படப்பிடிப்பு கொரோனாவால் திடீர் நிறுத்தம்? வெளியான ஷாக் தகவல்!
‘குக் வித் கோமாளி’ சீசன் 3 படப்பிடிப்பு கொரோனாவால் திடீர் நிறுத்தம்? வெளியான ஷாக் தகவல்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வந்த சமயத்தில், குழுவில் உள்ள இருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி இருக்கிறது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சூட்டிங் நிறுத்தம்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 விரைவில் துவங்க இருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3வது சீசன் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை வருடம் முழுக்க ஒளிபரப்பினாலும், அதனை காணவும் ரசிகர்கள் தயாராக இருந்தனர். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருக்கும் ‘குக் வித் கோமாளி’ ஷோ தற்போது 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

கண்ணம்மாவுக்கு அம்மன் கொடுத்த நீதி, திருந்தி விடுவாரா பாரதி? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அந்த வகையில் வரும் ஜனவரி 16ம் தேதியுடன் ‘பிக் பாஸ்’ சீசன் 5 முடிவுக்கு வரும் நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 ஒளிபரப்பாகலாம் என்று தகவல்கள் வெளியானது. இதற்கான ப்ரோமோ கூட கடந்த வாரங்களில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருந்தது. இப்படி இருக்க ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் புதிய சீசனில் குக் ஆக நடிகை ஊர்வசி, அம்மு அபிராமி, விஜி, ரோஷினி ஹரிப்ரியன், தாமரை செல்வி ஆகியோருடன் மனோபாலா, நந்தன், இர்ஃபான், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கோமாளிகளை பொறுத்தவரை புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா ஆகிய நட்சத்திர கோமாளிகளுடன் பரத், முக்குத்தி முருகன் ஆகியோரும் இடம் பெற இருக்கின்றனர். இதில் புகழ் மட்டும் சில எபிசோடுகளுக்கு பின்னர் நிகழ்ச்சியில் இணைவார் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் முதற்கட்ட ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் இதன் 2ம் கட்ட ஷெட்யூல் நடைபெற்று வந்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பாண்டியனுடன் இணைந்த ஐஸ்வர்யா!

இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் குழுவில் உள்ள இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ‘குக் வித் கோமாளி’ ஷூட்டிங் இப்போதைக்கு நிறுத்தபட்டிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்படி திடீரென இடைநிறுத்தப்படும் ‘குக் வித் கோமாளி’ ஷூட்டிங் காரணமாக திட்டமிட்டபடி நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகுமா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!