ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 21, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 21, 2018

  • முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வங்காள தேசத்தில் உள்ள சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான்,ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினராகக் கொண்ட SCO அமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த ஆண்டு (2017) புதிதாக சேர்ந்தது.
  • விளையாட்டுச் செய்திகளுக்காகவே ஸ்போர்ட்ஸ் ஃபிளாஷல் எனும் பிரத்யோக இணைய வானொலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் .ப்ளாஸ் என்கிற வானொலி முழுக்க முழுக்க 24 X 7 பணியில் இயங்க இருக்கிறது. விளையாட்டைப் பற்றிய நிகழ்வுகள் இந்த வானொலியல் தொகுத்து வழங்கப்படும்.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பில் அனாதைகளுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க அம்மாநில மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிந்துள்ளது.
  • சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாஹீ,ஆமதாபாத் தொழில் முனைவோர் மையத்தை நாட்டுக்கு அர்பணித்தார் புதுமைகளைக் கொண்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என கூறினார்.
  • புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம்; பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி ஜனவரி 22 ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
  • போக்குவரத்தில் சிறந்த நகரம் “சென்னை” காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு வழங்கினார்.
  • சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி செய்யப்படும். பொருள்கள், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆஸ்திரேலிய கூட்டமைப்பில் (AG) இந்தியா 43 வது உறுப்பினராக இணைந்துள்ளது.
  • உலகில் அதிகமானோர் பார்வையிட்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!