ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 26, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 26, 2018

  • மத்திய அரசின் (UDAN) ‘உடான்’ (Udey Deshka Aam Nagrik) திட்டத்தின் மூலம் சென்னை சேலம் இடையே True Jet மூலம் முதல் விமான சேவை 25.03.2018 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கிப்பட்டது.
  • தமிழகத்தில் புதியதாக 9 விமான நிலையங்கள்: ஓசூர் நெய்வேலி தஞ்சை வேலூர் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் ஆணையத்துறை அறிவிப்பு.
  • தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மேற்கு மாம்பாலம் போலீஸ் ஸ்டேஷனில் சூரிய மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆயுள் காப்பீட்டு கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலவரையறை 31-மார்ச் 2018 லிருந்து காலவரையற்றதாக (infinetely) ‘இந்திய காப்பீடு துறைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம்’ Insurance Regulatoryan Development Authourityof India (IRDAI) அறிவித்துள்ளது.
  • ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ (Pradhan mantri Jeaven Jyoti Bima Yojana) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PPradhan mantra Suraksha Bima Yojana) ஆகியவை இந்த காப்பீடாக 9 மே 2015-ல் தொடங்கப்பட்டது.
  • ‘Print Biennale India 2018’ என்ற பெயரில் முதல் சர்வதேச கிராஃபில் அச்சு கண்காட்சி (International Exhibition of Graphic Prints) புது டில்லியில் 25.03.2018 அன்று நடைபெற்றது.
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள ‘சர்தார்வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு’ 2017 ம் ஆண்டின் மிகவும் மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் எனும் விருதை சர்வதேச விமான நிலையங்களின் கவுன்சில் (Airport Council International (ACI) வழங்கியுள்ளது.
  • மாதவ்பூர் மேளா (Madhavpur Mela) எனப்படும் கலாச்சாரத் திருவிழா 25 – 28 மார்ச் 2018- தேதிகளில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள மாதவ்பூர் பகுதியில் மத்திய அரசின் ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்’ எனப்படும் கலாச்சாரத் திட்டத்தின் கீழ் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள ‘மிஷ்மி மலைவாழினத்தவரின்’ கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது.
  • மார்ச் 2018 வரை உலக பாரம்பரியபட்டியலில் (Word Heritage List) மொத்தம் 36 இந்திய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. என மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றில் 28 கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் 7 இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும்ää 1 இயற்கை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமும் அடங்கும்.
  • உலக அளவில் குற்றவியல் விகிதத்தில் இந்தியா மிகக்குறைவாக 33 அளவீட்டைப் பெற்றுள்ளது. இதனை குற்றவியல் கொள்ளை ஆராய்ச்சி நிறுவனம் (Institude of Criminal Policy Research) மிக்குறைந்த குற்றவியல் விகிதம் உடைய நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!