ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 22, 2018

0

 ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 22, 2018

  • 7 வது பெண்கள் அறிவியல் காங்கிரஸ் “(Women’s Science Congress) மணிப்பூர் மாநிலத்திலுள்ள இம்பால் பல்கலைக் கழகத்தில் 18-19 மார்ச் 2018 ஆகிய தினங்களில் 105 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூடுகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
  • 8 வது சர்வதேச தியேட்டர் ஒலிம்பிக்ஸ் (International Theatre Olympics) நட்பின் கொடி (Flag of Friendship) எனும் நோக்கில் 17 பிப்ரவரி முதல் 2018 முதல் 8 ஏப்ரல் வரை நடைபெற்றது.
  • போர் நினைவுச் சின்னம் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி (War Memorial Boys and Girls Hostal) டேராடூனில் தண்டா லகாண்ட் கிராமத்தில் உத்ரகாண்ட் மாநில அரசினால் துவங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் (2013 – 17) ரஷியா முதலிடத்திலும்ää அமெரிக்கா 2வது இஸ்ரேல் 3வது பிரான்ஸ் 4வது இடத்திலும் இருப்பதாக ஸ்டாக்கோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கல்வித் துறையில் மனித மூலதனத்தை மாற்றியமைப்பதற்கான நிலையான செயல்திட்டம் 2018-2020 (Sustainable Action for Transforming Human Capital in Education)) (SATH – E) 2018 March 17 ம் தேதி வெளியிடப்பட்டது.
  • “வருணா 2018” (VARUNA 18) என்ற பெயரில் இந்திய – பிரெஞ்சு கடற்படைகளின் கூட்டு ராணுவப் பயிற்சி அரபிக் கடல் வங்காள விரிகுடா மற்றும் தென் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நடத்தப்பட உள்ளது.
  • உலகிலேயே அதிக செலவாகும் நகரம் (Most Expensive City) சிங்கப்பூர் என் “எக்கணாமிஸ்ட் இன்டலிஜன்ஸ் யுனிட்” (Economist intelligence Unit) அமைப்பு வெளியிட்டுள்ள “உலக வாழ்க்கை செலவின அறிக்கை 2018” (World Wide Cost of Living Report 2018) யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திலிருந்து (International Criminal Court) 16.03.2018 அன்று இந்தியா வெளியேறியுள்ளது.
  • சீனாவின் “ஏவுகனை மனிதர் என்று அழைக்கப்படும் வெய் ஃபெங்கே (63) அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சீன பிரதமராக லீ செகியாங் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • “பிளாக் செயின் (Black Chain)) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தும் முதல் நாடு எனும் பெருமையை “சியரா லியோன்” (Sierra Leone) பெற்றுள்ளது.
  • உலக மறுசுழற்சி தினம் (Global Recycling Day)- மார்ச் 18.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!