மே 7 நடப்பு நிகழ்வுகள்

0

மே 7 நடப்பு நிகழ்வுகள்

மே 7 – இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற முதல் ஆசியர் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் பிறந்ததினம்

  • இந்தியா(ஜன கன மன), வங்காளதேசம்(அமர் சோனார் பங்களா) என இரு நாடுகளுக்கு தேசிய கீதம் அளித்த வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூரின் 158-வது பிறந்ததினம் 07.05.2018-ல் கொண்டாடப்படுகிறது.
  • கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர்

மாநிலம்

மத்திய பிரதேசம்

பொலிவுரு நகரங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும் முதலாவது உச்சி மாநாடு

  • போபாலில் மே 8,2018 பொலிவுரு நகரங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகளுக்கான முதலாவது உச்சிமாநாட்டை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் புரி தொடங்கி வைக்கிறார்.

மேற்கு வங்காளம் 

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் வங்காளதேசம் பவன் 

  • வங்காளதேசம் விடுதலைக்கு பின்னர் உள்ள வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில்  வரும் மே 25-ம் தேதி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர்  பங்கேற்க உள்ளனர்.

தேசியசெய்திகள்

182 “பல்நோக்கு மையங்கள் ” திறப்பு – கூடுதலாக 100 பல்நோக்கு மையங்கள் திறக்க ஒப்புதல்

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம் 07.05.2018 ஏற்பாடு செய்திருந்த திட்ட ஒப்புதல் வாரிய சந்திப்பின் போது தமிழ்நாடு, அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், நாகாலாந்த், ஒடிசா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூடுதலாக  பல்நோக்கு மையங்கள் திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • திட்ட ஒப்புதல் வாரிய சந்திப்பின் போது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்

  • ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 10 கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
  • ஜூலை மாதத்துக்கு பிறகு அமலுக்கு வரும் இத்திட்டத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆயுஷ்மான பாரத் கீழ் முதலாவது ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வு மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

தேசிய வக்பு மாநாடு

  • ’பிரதான் மந்திரி ஜன் விகாஸ் கார்யகிராம்’ திட்டத்தின் கீழ், சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சகம், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள், பல்நோக்குச் சமுதாய மையங்கள், சத்பவ் மண்டபங்கள், ஹுனார் ஹப்கள், மருத்துவமனைகள், வணிக மையங்கள் போன்று நாடெங்கும் உள்ள வக்பு சொத்துக்களைக் கட்டுமானம் செய்யும் என மத்தியச் சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
  • சுதந்திரத்திற்குப் பின்னர் இது முதன்முறையாக நடத்தப்பெறுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்காக உலக வங்கியிடம் 200 மில்லியன் டாலர் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்து

  • தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்காக மத்திய அரசு 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஒன்றில் உலக வங்கியுடன் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.
  • 2022ம் ஆண்டுக்குள் 0-6 வயது வரையிலான குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்தின்மையை 38.4 சதவீதத்தில் இருந்து 25% குறைக்க இந்தக் கடன் அரசுக்கு உதவும்.
  • முழுமையான ஊட்டச்சத்திற்கான பிரதமரின் பரஸ்பரத் திட்டம் எனப்படும் போஷான் திட்டத்தை கடந்த 2018 மார்ச் 8ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

சர்வதேச செய்திகள்

ரஷ்யா அதிபர்

  • ரஷியாவின் அதிபராக நான்காவது முறை 07.05.2018ல் பதவியேற்று கொண்ட விளாடிமிர் புதின்.
  • ரஷியாவின் துணை பிரதமராக நிதி மந்திரி அன்ட்டன் சிலுவனாவ்  நியமனம்.
  • பிரதமர் – டிமிட்ரி மெட்வடேவ்

வணிகசெய்திகள்

வீடுகளுக்கு டீசல்: ஹெச்பிசிஎல் திட்டம்

  • இந்தியன் ஆயில் நிறுவனத்தை தொடர்ந்து வீடுகளுக்கு டீசல் வழங்கும் திட்டத்தை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) தொடங்கி இருக்கிறது.

அறிவியல்

முதன் முறையாக ரோபோ மூலம் தண்டு வட ஆபரேசன்- இந்திய டாக்டர் சாதனை

  • அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழுவினர் முதன் முறையாக ரோபோ மூலம் தண்டுவட ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர்.

விளையாட்டுசெய்திகள்

இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ்

  • இஸ்தான்புல் ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீரர் டாரோ டேனியல் வெற்றி பெற்று முதல் ஏடிபி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

முனிச் ஓபன் டென்னிஸ்

  • ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஹாக்கி

  • தமிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவராக சேகர் மனோகர் தேர்வு.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!