மே 5 மற்றும் 6 நடப்பு நிகழ்வுகள்

0

மே 5 மற்றும் 6 நடப்பு நிகழ்வுகள்

மாநிலம்

தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்த வைரவிழா மற்றும் 160- வது பட்டமளிப்பு விழா

 • சென்னை பல்கலைக்கழகம் 160-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது.
 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களையும், 9 பேருக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

மகாராஷ்டிரா

 • உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் சேவை – தொடங்கி 26 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு.
 • இந்தியாவின் மேற்கு ரெயில்வே பெண்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்கள் சிறப்பு ரெயில் சேவையை 1992-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி தொடங்கியது.
 • இது உலகின் முதல் பெண்கள் சிறப்பு ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர்

காஷ்மீரில் தர்பார் மாற்றம் – நாளை முதல் ஸ்ரீநகரில் தலைமை செயலகம் இயங்கும்

 • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பருவநிலைக்கேற்ப நடைபெறும் தர்பார் மாற்றத்தின்படி அம்மாநிலத்தின் தலைமை செயலகம் நாளை முதல் ஸ்ரீநகரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியசெய்திகள்

பிரவாசி பாரதீய திவாஸ்

 • வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையில் கொண்டப்படும் பிரவாசி பாரதீய திவாஸ் இனி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாரணாசியில் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறும்.

துணை ஜனாதிபதி முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

 • துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக கவுதமாலா, பனாமா, பெரு நாடுகளுக்கு வெங்கையா நாயுடு 05.2018ல் புறப்பட்டு சென்றார்.

சர்வதேச செய்திகள்

உலகின் மிகப்பெரிய கண்ணாடி மாளிகை

 • லண்டனில் உள்ள உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை 5 ஆண்டுகளுக்கு பின் ரூ.380 கோடி செலவில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கின்னஸ் சாதனை

 • சீனாவை சேர்ந்த பிரபல ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனம், ஒரே நேரத்தில் 1374 விமானங்களை பறக்கவிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.

‘வட கொரியா’ – தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது

 • தென் கொரியாவுடன் நல்லுறவை தொடங்கியுள்ள வட கொரியா தனது நேரத்தை, அந்நாட்டிற்கு இணையாக அரைமணிநேரம் முன்னோக்கிச் சென்றுள்ளது.
 • ஒரே நாள் இரவில் நடந்த மாற்றத்தால் இருநாடுகளும் ஒரே நேர மண்டலத்திற்குள் வந்துள்ளன.

ஜப்பானில் காளைகள் மோதும் வீர விளையாட்டு: முதன் முறையாக பெண்களுக்கு அனுமதி

 • ஜப்பானிலும் ஆண்டுதோறும் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெறுகிறது.
 • ஜப்பானில் காளைகள் மோதும் மைதானத்திற்குள் அதனை கட்டுப்படுத்துவதற்காக முதன்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயோ எத்தனால் வாகனங்களை தயாரிக்க பஜாஜ், டிவிஎஸ் நிறுவனங்களுக்கு அனுமதி

 • குறிப்பாக கோதுமை வைக்கோல் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பயோ எத்தனால் மூலம் 100 சதவீதம் இயங்கும் வாகனங்களை உருவாக்க பஜாஜ், டிவிஎஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் கூறினார்.
 • ஒரு டன் வைக்கோலில் இருந்து 280 லிட்டர் எத்தனால் உற்பத்தியாகும் என்றும் கூறினார்.

வணிகசெய்திகள்

உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஹார்வர்டு பல்கலைக்கழகம்

 • அடுத்த பத்தாண்டுகளுக்கு உலகில் மிகவேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
 • ஆண்டுக்கு 7.9 சதவீதம் என்ற அளவில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
 • சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியா முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட்டின் 75% பங்குகள் வால்மார்ட்டுக்கு விற்பனை

 • 75 சதவீத பங்குகளுக்கு 1,500 கோடி டாலரை வால்மார்ட் பிளிப்கார்ட்டுக்கு கொடுக்கிறது.
 • பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 2,000 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அறிவியல்

காற்று மாசு அளவு, வெப்பமயமாதலை கண்டறிய உதவும்திருச்சி மாணவியின் ‘அனிதா சாட்’ விண்ணுக்கு பயணம்

 • வளிமண்டலத்தில் உள்ள காற்றில் மாசு அளவு மற்றும் வெப்பமயமாதல் ஆகியவற்றைக் கண்டறிய திருச்சியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வில்லட் ஓவியா தயாரித்துள்ள ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் மெக்சிகோவில் இருந்து மே 6 2018 விண்ணில் ஏவப்படுகிறது.

அரோரா ஸ்டேஷன் விண்வெளி ஹோட்டல்

 • இங்கிலாந்தை சேர்ந்த ஓரியான் ஸ்பேன் என்ற நிறுவனம் 2021-ம் ஆண்டில் விண்வெளியில் அரோரா ஸ்டேஷன் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்க இருக்கிறது.
 • அந்த ஹோட்டலுக்கு 2022-ம் ஆண்டு முதல் விருந்தினர்களை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூமியை தாக்க வரும் சூரியப் புயல்

 • மே 6,2018 அன்று பூமியை சூரியப் புயல் தாக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
 • பூமியை அவ்வப்போது சூரியப் புயல்கள் தாக்கி வருகின்றன. இந்த நிலையில் மே 6,2018 அன்று சூரியப் புயல், பூமியைத் தாக்கும் என்று தேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக (என்ஓஏஏ) அமைப்பு தெரிவித்துள்ளது.

சிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து – ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்

 • ஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன.
 • ரூர்கே ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் என்எஸ்பி-2 புரோட்டீஸ் என்ற என்சைமில் இருந்து பெப்-1, பெப்-2 ஆகிய மூலக்கூறுகளை எடுத்து அதன் மூலம் சிக்குன்குனியா வைரஸ்களை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

நாஸாவின் ‘இன்சைட்’ விண்கலம்

 • செவ்வாய் கிரகத்துக்கு மனித ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கு முன்னதாக அந்தக் கிரகத்தின் பூகம்பங்களை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அடுத்த மைல்கல் விண்கலம் இன்சைட் என்பதை அனுப்பியுள்ளது.

விளையாட்டுசெய்திகள்

உலக செஸ் போட்டியில் காரைக்குடி மாணவி சாம்பியன்

 • ஐரோப்பாவில் நடந்த உலக அளவிலான செஸ் போட்டியில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 1-ம் வகுப்பு மாணவி லக்‌ஷனா(வயது 6) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

ஆசிய வலுதூக்குதல்: சென்னை மாணவி ரம்யாவுக்கு தங்கம்

 • ஆசிய வலுதூக்குதல் போட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான 84 கிலோ எடை பிரிவில் சென்னை மாணவி ரம்யா தங்கப்பதக்கம் வென்றார்.

தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ்

 • தெற்கு ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் 06.05.2018ல் கொழும்பில் தொடங்கியது.
 • முதல் நாளில் இந்தியா 11 தங்கம், 10 சில்வர், மூன்று வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

ப்ராஹ் ஓபன் டென்னிஸ்- பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்

 • செக்குடியரசின் தலைநகர் ப்ராஹ்வில் ப்ராஹ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
 • 05.05.2018ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா ரொமானியா வீராங்கனை மிகாயேலா புஜர்னெஸ்குவை வீழ்த்தினார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!