நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 26 2018

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 26 2018

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 26 – அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்குவதற்கான சர்வதேச தினம்

 • 2013 செப்டம்பர் 26 ஆம் தேதி நியூ யார்க்கில் பொது விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் அணுசக்தி நீக்கம் தொடர்பான விஷயங்களில் ஆழமான ஈடுபாடு கொள்ளவும் அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்குவதற்கான சர்வதேச தினத்தை பொதுச் சபை அறிவித்தது.

தேசிய செய்திகள்

அசாம்

மாநிலத்தில் அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டத்தை அரசு துவக்க உள்ளது

 • தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, மாநிலத்தில் அனைவருக்குமான ஓய்வூதிய திட்டத்தை அசாம் அரசு துவக்க திட்டம்.

கேரளம்

8 வது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்

 • 8 வது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பை திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.14 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 500 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் யோகா திறமையைக் காட்டுவார்கள்.

ஒடிசா

ஒடிசா 2 ஆண்டுகளுக்கு காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை கொண்டாட உள்ளது

 • ஒடிசா அரசு இந்த ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி முதல் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை இரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாட முடிவு செய்துள்ளது.

புது தில்லி

ஆதார் அடையாள அட்டை செல்லும்உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 • அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசின் முதன்மை ஆதார் திட்டத்தை செல்லுபடியாகும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

ராஜஸ்தான்

ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா -2018

 • ஜெய்ப்பூரில் ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா 2018 ஐ துணைக்குடியரசுத்  தலைவர் எம்.வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

சர்வதேச செய்திகள்

ஆயுஷ்  தகவல் மையம்  ருமேனியாவில் அமைக்கப்பட்டது

 • ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத தகவல் மையத்தை ருமேனியாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் ஆயுஷ் அமைப்பு பற்றிய உண்மையான தகவலை பரப்பவும், ருமேனியாவில் ஆயுர்வேத நடைமுறையை ஊக்குவிக்கவும் அமைத்துள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

தமிழ்நாட்டில் நீர்வழங்கல், கழிவுநீர், நீர் வடிகால் வசதி ஆகியவற்றிற்கு ஏடிபி $ 500 மில்லியன் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது

 • ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) $ 500 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 நகரங்களில் தட்பவெப்பநிலை ரீதியான நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் நீர் வடிகால் வசதி ஆகியவற்றை மேம்படுத்தும்.
 • நாட்டின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் பைலட் அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

தரவரிசை & குறியீடு

பொருளாதார சுதந்திரக் குறியீடு

 • 162 நாடுகளில் இந்தியா – 96 வது இடம், சிவில் சொசைட்டி மையத்தால் (CCS) வெளியிடபட்டது .
 • 1) ஹாங்காங் 2) சிங்கப்பூர் 3) நியூசிலாந்து

மாநாடுகள்

பணியிட பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதாரம் குறித்த தேசிய மாநாடு

 • புதுடில்லியில் பணியிட பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதாரத்திற்கான 7 வது தேசிய மாநாட்டை தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் திறந்து வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய டிஜிட்டல் தொலை தொடர்பு கொள்கை- 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 • இந்தியாவை இணைக்கவும், உந்தி செல்லவும், பாதுகாக்கவும் உலகளாவிய அகன்ற அலைவரிசை இணைப்புகள் வினாடிக்கு 50 மெகாபைட்கள் வேகத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வழங்குதல், அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் வினாடிக்கு 1 கிகாபைட் வேகத்தில் அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்குதல் போன்றவை தேசிய டிஜிட்டல் தொலை தொடர்பு கொள்கை- 2018 ன் நோக்கமாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிக்க மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல்

 • சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிப்பது, தற்போது அமலில் உள்ள அமைப்பை இடைநிலைத் திட்டத்துடன் மாற்றம் செய்வது குறித்தும் மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது

பாதுகாப்பு செய்திகள்

டி -72 பீரங்கிகளுக்கான ஆயிரம் என்ஜின்களை கொள்முதல் செய்ய டிஏசி (DAC) ஒப்புதல்

 • இராணுவத்தின் டி-72 பீரங்கிகளில் பொருத்த 1000 என்ஜின்களை கொள்முதல் செய்வதற்கு சுமார் 2,300 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது.

விருதுகள்

தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள்குடியரசு தலைவர் வழங்கினார்

மேலும் விவரங்கள் பெற இங்கே க்ளிக் செய்யவும்

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

ஜன் தன் தர்ஷக்

 • நிதி அமைச்சகம் நிதி இணைப்பின் ஒரு பகுதியாக மொபைல் செயலி “ஜன் தன் தர்ஷக்”ஐ தொடங்கி வைத்தார்.
 • நாட்டில் ஒரு இடத்திலுள்ள நிதிச் சேவை தொடுபுள்ளியை கண்டறிய பொது மக்களுக்கு வழிகாட்டல் வழங்குவதற்கான மொபைல் செயலி இதுவாகும்.

நிதி அமைச்சர் www.psbloansin59minutes.com வலைத் தளத்தை தொடங்குகிறார்

 • psbloansin59minutes.com என்ற வலைப்பின்னல் மூலம் எம்எஸ்எம்இ (MSME)க்கு ரூ.1 கோடி வரையிலான கடனை 59 நிமிடங்களுக்குள் வழங்க சிட்பி (SIDBI) மற்றும் 5 பொதுத்துறை வங்கிகளிடம் (PSBs) பெற உதவும்.

விளையாட்டு செய்திகள்

இந்தியாஇலங்கை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர்

 • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

PDF DOWNLOAD

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here