நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 25 2018

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 25 2018

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 25 – அந்த்யோதயா தினம்

  • பண்டிட் தீன்தயால் உபத்யாயாவின் பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் மாதம் 25ம் தேதியை அந்த்யோதயா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

RPF ஆயுதம் ஏந்திய மத்திய படையாக அறிவித்த 34வது ஆண்டுவிழா

  • இரயில்வே பாதுகாப்பு படையை (RPF) ஆயுதம் ஏந்திய மத்திய படையாக அறிவித்த 34 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு ரயில்களில் பாதுகாப்பு மற்றும் ரயில்வே வளாகத்தில் பயண விழிப்புணர்வு திட்டங்களை ஏற்பாடு செய்கிறது.

அசாம்

உண்மையான குடிமகன் NRC யிலிருந்து விலக்கப்படமாட்டார்கள்: அசாம் அரசு

  • அசாம் அரசு குடிமக்களின் தேசியப் பதிவுகளில் இருந்து எந்த உண்மையான குடிமகனும் விலக்கப்படமாட்டார்கள் என்று உறுதி அளித்தனர்.

புது தில்லி

காற்று மாசுபாடு குறைப்பு சாதனங்கள் திறக்கப்பட்டது

  • அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் உள்ள ஐ.டி.ஓ. டிராபிக் சந்திப்பு மற்றும் முகர்பா சௌக் ஆகிய இடங்களில் போக்குவரத்து சந்திப்புகளுக்கான காற்று மாசு கட்டுப்பாட்டு கருவி WAYUவைத் திறந்து வைத்தார்

உத்திரப்பிரதேசம்

4 வது இந்திய சர்வதேச அறிவியல் விழா

  • இந்தியாவின் சர்வதேச அறிவியல் சங்கத்தின் நான்காவது பதிப்பு அக்டோபர் 6, 2018 அன்று லக்னோவில் இந்திய ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்.
  • IISF-2018 மைய கருப்பொருள் மாற்றத்திற்கான அறிவியல்

சர்வதேச செய்திகள்

காத்மண்டுவில்இந்திர ஜத்ராதிருவிழா கொண்டாட்டம்

  • நேபாளத்தில் புகழ்பெற்ற இந்திர ஜத்ரா திருவிழா காத்மண்டுவில் கொண்டாடப்படுகிறது.
  • இந்த எட்டு நாள் திருவிழா மழை மற்றும் நல்ல அறுவடை வேண்டி இந்திர தேவனை வழிபாடு செய்யப்படுகிறது.

நெதர்லாந்தில்காந்தி மார்ச்

  • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் இரண்டு ஆண்டுகால கொண்டாட்டங்களை அறிமுகப்படுத்த ஹேக் நகரில் உள்ள சிறப்புமிக்க சமாதான அரண்மனையில் இருந்து க்ரோட் கெர்க்கிற்கு ‘காந்தி மார்ச்’ ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

நெல்சன் மண்டேலாவின் சிலை ஐக்கிய நாடுகள் சபையில் திறந்து வைக்கப்பட்டது

  • தென்னாபிரிக்க தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நெல்சன் மண்டேலாவின் சிலை ஐக்கிய நாடுகள் சபையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆண்டு மண்டேலா பிறந்து 100வது ஆண்டு நிறைவு பெறுகிறது, மற்றும்N. 2019-2028 “நெல்சன் மண்டேலா சமாதானத்தின் தசாப்தம்” என்று அறிவித்தார்.

மாநாடுகள்

இந்தியாவில் .எஸ்..வின் முதலாவது சபை, இரண்டாம் மந்திரி IORA மற்றும் இரண்டாம் REINVEST சந்திப்பு

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சர்வதேச சூரிய ஒளியமைப்பின் (ISA) முதல் சபை, 2வது இந்திய பெருங்கடல் ரிம் சங்க(IORA) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மந்திரி கூட்டம் மற்றும் 2 வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு கூட்டம் மற்றும் எக்ஸ்போ (REINVEST- 2018) ஆகியவை அக்டோபர் 2 வது முதல் 5 ஆம் தேதி வரை புதுடில்லியில் நடக்க உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மதநல்லிணக்க கூட்டணி மன்றம்

  • ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் நவம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மதநல்லிணக்க கூட்டணி மன்றத்தை நடத்தும். இணையத்தளத்தின் மூலம் கொள்ளை மற்றும் குற்றம் ஆகியவற்றிலிருந்து இளம் நபர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒற்றுமை கருத்துக்களை உருவாக்க மத தலைவர்களின் முயற்சிகளை வலுப்படுத்துவது, சமூக சவால்களை பற்றி உரையாற்றுவது போன்றவை இம்மன்றத்தின் நோக்கமாகும்.

நியமனங்கள்

  • பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத் தலைவர்அஜித் மோகன்

திட்டங்கள்

சௌவாக்யா திட்டம்

  • அசாம் அரசு சௌவாக்யா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கவுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா, சீனா உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது

  • சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் இந்திய வருகையின்போது உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இந்தியா மற்றும் சீனா கையெழுத்திட உள்ளது. இது இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய தொடக்கம் ஆக இது அமையும்.

யுஏஇ, செஞ்சிலுவை ஒப்பந்ததில் கையெழுத்து

  • ஏமன், மியான்மர் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு ஆகியவற்றில் மனிதாபிமானப் பதிலீட்டுத் திட்டத்தை ஆதரிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

விருதுகள்

  • குரோஷிய கால்பந்து வீரர் லூகா மோட்ரிக் – ஆண்டின் சிறந்த ஃபிஃபா வீரர்

விளையாட்டு செய்திகள்

செர்பியா ஜூனியர் & கேடட் ஓபன்

  • பெல்கிரேடில் 2018 செர்பியா ஜூனியர் மற்றும் கேடட் ஓபனில் டேபிள் டென்னிஸில் பெண்கள் அணி மற்றும் கேடட் சிறுவர்கள் அணி பட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

PDF DOWNLOAD

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!