நடப்பு நிகழ்வுகள் QUIZ மே 14 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ  மே 14 2019

நடப்பு நிகழ்வுகள்Video கிளிக்செய்யவும்

CTBTO கூட்டங்களில் பார்வையாளராக இருக்க எந்த நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது?

விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBTO) நிர்வாகச் செயலாளர், லசினா செர்போ, CTBTO இல் ஒரு பார்வையாளராக இருக்க இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் பார்வையாளராக இருப்பதால், சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் தரவுகளை அணுக இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும், இந்த வசதி 89 நாடுகளில் உள்ள 337 வசதிகளை பயன்படுத்த வழிவகுக்கும்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு?

1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து அறிவித்தது.

இந்தியாவில் உள்ள 90 % காண்டாமிருகங்கள் எந்த மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் உள்ளது?

இந்திய நாட்டில் உள்ள அனைத்து காண்டாமிருகத்தின் டிஎன்ஏ விவரங்களையும் உருவாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 2,600 காண்டாமிருகங்கள் உள்ளன, அவற்றில் 90% அசாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் அகாடமி தலைவர் இந்தியாவில் எங்கு நடைபெறும் திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க உள்ளார்?

மகாராஷ்டிரா மாநில மராத்தி திரைப்பட விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராக மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அகாடமி தலைவரான ஜான் பெய்லி பங்கேற்க உள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படை எங்கு லாஜிஸ்டிக் தளங்களை அமைத்துள்ளது?

சீன வரலாற்றில் முதல் முறையாக சீன கடற்படை இந்தியப் பெருங்கடலில் டிஜிபோட்டியில் லாஜிஸ்டிக் தளங்களைக் கொண்டுள்ளது.அது மட்டுமின்றி அரபிக் கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றவர் யார்?

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் மூன்றாவது மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் திரைப்பட விழா எந்த நாட்டில் நடைபெறும்?

• இந்தியா பெவிலியன் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை திறந்து வைகைப்பட உள்ளது. இந்த வருடம் I & B செயலாளர் அமித் காரே தலைமையில் இந்திய பிரதிநிதிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

எந்த ஆண்டிற்குள் இந்திய காண்டாமிருகத்திற்கு டி.என்.ஏ. தரவுத்தளம் அமையவுள்ளது?

2021ம் ஆண்டுக்குள், இந்திய காண்டாமிருகம் இந்தியாவில் அதன் அனைத்து இனங்களின் டி.என்.ஏ-வரிசைமுறையை கொண்டிருக்கும் முதல் காட்டு விலங்கு வகைகளாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here