நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 20, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

புதிய இ-சலான் அமைப்பு, மின் கட்டண நுழைவாயில் எந்த நகரத்தின் போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது?

டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் டெல்லி போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய இ-சலான் முறையையும் மின் கட்டண நுழைவாயில் முறையையும் தொடங்கி வைத்துள்ளார்.இ-சலான் சாதனங்கள் செயலில் உள்ள ஜி.பி.எஸ் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன திட்டங்களுக்கான நிதி வழங்கலை விசாரிக்க சீனாவும் எந்த நாடும் ஒரு கூட்டு செயற்குழுவை அமைத்துள்ளது?

வங்காளதேசத்தில் நடந்து வரும் சீன திட்டங்களுக்கான மிகக் குறைந்த அளவிலான நிதி வழங்கலை விசாரிக்க வங்காளதேசமும் சீனாவும் சேர்ந்து ஒரு கூட்டு செயற்குழுவை அமைத்துள்ளன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சந்திரயான் -2யை எந்த தேதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சந்திரயான் -2யை ஜூலை 22 அன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது.

சர்வதேச செஸ் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1924ம் ஆண்டு ஜூலை 20 இல் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 20 அன்று சர்வதேச செஸ் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஸ் தினமாக கொண்டாடும் யோசனையை யுனெஸ்கோவால் முன்மொழியப்பட்டு 1966 முதல் கொண்டாடப்படுகிறது.

ரயில் பாதைகளை மேம்படுத்த இந்தியாவுடன் எந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது?

26 மில்லியன் செலவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கிய ரயில் பிரிவில் தடங்களை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. இலங்கை ரயில்வேயை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.

பிரதமரின் புதிய தனிச்செயலாளராக நியமிக்கப்படவர் யார் ?

2004ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய அயலக சேவை (ஐ.எஃப்.எஸ்) அதிகாரியான விவேக் குமார் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிச்செயலாளராக (பி.எஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கோல்டன் பேபி லீக்ஸ் 2019-20 கையேட்டை எந்த அமைச்சர் வெளியிட்டார் ?

அகமதாபாத்தில் நடைபெற்ற இன்டர்காண்டினன்டல் கோப்பையின் ஒரு பகுதியாக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கோல்டன் பேபி லீக்ஸ் 2019-20 கையேட்டை விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு வெளியிட்டார்.

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் பட்டத்தை எந்த நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வென்றது?

ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

ஷூட்டிங் ஜூனியர் உலகக் கோப்பையில், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், சுஹ்ல் ஜெர்மனியில் நடந்த ரைபிள் 3-நிலை போட்டியின் இறுதிப் போட்டியில் ஜூனியர் உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.

நாட்டின் 64 வது கிராண்ட் மாஸ்டர் யார்?

பிருது குப்தா நாட்டின் 64 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். போர்த்துகீசிய லீக்கின் நான்காவது சுற்றைத் தொடர்ந்து ஒரு GM ஆக இருக்க வேண்டிய அனைத்து தொழில்நுட்ப நிபந்தனைகளையும் 15 ஆண்டு நான்கு மாதம் மற்றும் 10 நாட்கள் ஆன பிருது குப்தா பூர்த்திசெய்தார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 20, Quiz 2019 video – Click Here

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here