நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 07 & 08, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 07 & 08, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

38வது உலக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக எந்த நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது ?

அசர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வின் போது, ​​ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கக்கோரிய இந்தியாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.

2030 க்குள் ரயில்வேயில் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய அரசுமுடிவுசெய்துள்ளது ?

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், 2030 ஆம் ஆண்டளவில் ரயில்வேயில் 50 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பையிலிருந்து கோவா வழியாக மங்களூரு செல்லும் முழு கொங்கன் ரயில் பாதையும் 11,000 கோடி ரூபாய் செலவில் மின்மயமாக்கப்படும் என்று திரு கோயல் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் யார்?

மத்திய பட்ஜெட்டில் உரத்திற்கான மானிய ஒதுக்கீடு சுமார் 10,000 கோடி ரூபாய் உயர்வு கண்டுள்ளது. உரங்கள் மானியத்திற்கான அதிகரித்த இந்த ஒதுக்கீடு விவசாயிகளின் மானிய பரிமாற்றத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என இரசாயன மற்றும் உர அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்தார். இந்த மானியம் நேரடியாக விவசாயிகளின் கணக்கிற்கு நேரடி மானிய உதவி திட்டம் (டிபிடி) மூலம் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திராவில் எந்த மாவட்டத்தில் ஒன்பது புதிய எஃப்.பி.ஓக்கள் அமைக்கப்பட உள்ளன?

கர்னூல் மாவட்டத்தில் ஒன்பது புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) அமைக்க தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) 102 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. அவற்றில் இரு அமைப்புகள் மீன் வளத்தை ஊக்குவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்னூலில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு எந்த நகரத்தில் மூன்று சிறந்த விளையாட்டு மையங்களை அமைக்க உள்ளது?

அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் மூன்று சிறந்த விளையாட்டு மையங்களை மத்திய அரசு விரைவில் அமைக்க உள்ளதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். மேலும் இவ்விளையாட்டு மையம் தற்காப்பு கலைகள், பளு தூக்குதல் மற்றும் குத்துச்சண்டைக்கான பிரத்யேக சிறப்பு மையமாக இருக்கும் என திரு ரிஜிஜு கூறினார்.

இந்த ஆண்டு ஹஜ்ஜில் பெண்களின் டிஜிட்டல் இந்தியா சமத்துவத்தை எந்த நாடு ஏற்றுக்கொண்டது ?

இந்த ஆண்டு ஹஜ்ஜில் பெண்கள் சமத்துவத்திற்கான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டது சவூதி அரேபியாவிற்கு இந்தியர்கள் ஹஜ் பயணமானது ஏராளமான இந்தியா ஹஜ் யாத்ரீகர்களை சென்றடைவதற்கான இந்திய அரசின் பெருமுயற்சி திட்டமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டது.

சர்க்கரை மாநாடு 2020 எந்த நகரத்தில் நடைபெற்றது?

மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்த சர்க்கரை மாநாடு 2020 புனேயில் தொடங்குகிறது. இந்திய சர்க்கரைத் தொழிலில் உள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் இடையில் ஒரு திறந்த உரையாடலை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில்துறையின் முக்கியஸ்தர்கள் இடையே முக்கிய அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் நடைபெறும்.

எந்த நகரத்தில் சைக்கிள் பகிர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது?

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சைக்கிள் பகிர்வு திட்டத்தை ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பதிவுசெய்த பயனர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லலாம். சைக்கிள்ளை எந்தவொரு நிறுத்தத்திலும் எடுத்துக்கொண்டு நிறுத்திக்கொள்ளலாம்.

ஐ.சி.சி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய கிரிக்கெட் வீரர் யார் ?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்திய ஐ.சி.சி தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடரில் ஐந்து சதம் அடித்ததைத் தொடர்ந்து 2 வது இடத்தைப் பிடித்தார் ரோஹித் சர்மா. பாகிஸ்தானின் பாபர் ஆசாம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலந்தில் நடந்த குட்னோ தடகள கூட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

போலந்தில் நடைபெறும் குட்னோ தடகளத்தொடரில் பெண்கள் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸ் முதலிடம் பிடித்து தனது இரண்டாவது சர்வதேச தங்கத்தை வென்றார். ஹீமா97 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தங்கம் வென்றார், வி.கே. விஸ்மயா 24.06 வினாடிகளில் கடந்து வெள்ளி வென்றார். ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 21.18 வினாடிகளில் பந்தய தூரத்தைக்கடந்து தேசிய சாதனை படைத்த வீரர் முகமது அனாஸ் தங்கம் வென்றார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07,08 2019 video – Click Here

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here