நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 10 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 10 2019

எந்த விதியின் கீழ் தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை திரையிட தடை விதித்துள்ளது?

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை திரையிட தடை விதித்துள்ளது. நடிகர் விவேக் ஓபராய் பிரதமர் திரு நரேந்திர மோடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பசுமை முன்முயற்சிக்கான தங்க மதிப்பீட்டை பெற்ற இரயில் நிலையம் எது?

இந்திய பசுமை கட்டிடம் கவுன்சில் (ஐ.ஜி.சி.சி) பயணிகளின் வசதிகள் அடிப்படையில் பசுமை முன்முயற்சிக்கான தங்க மதிப்பீட்டை திருப்பதி ரயில் நிலையத்திற்கு வழங்கியுள்ளது. இந்திய இரயில்வே சுற்றுச்சூழல் இயக்குனரகத்துடன் இணைந்து, ஐ.ஜி.சி.சி-சிஐஐ (IGBC-CII), பசுமை ரயில் நிலைய மதிப்பீட்டு முறையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த நாடு YouTube இன் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறியுள்ளது?

இந்தியா இணைய பாதுகாப்பு மற்றும் தரவு வளர்ச்சியில் கணிசமான வளர்ச்சி அடைந்துள்ளதுடன், YouTube இன் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறிவருகிறது, அதன் தரவு மூலம் 265 மில்லியன் இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் வீடியோ பகிர்வு வலைத்தளத்தைப் பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி விகிதத்தை எத்தனை சதவீதமாக குறைத்துள்ளது?

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2019ல் உலகளாவிய வளர்ச்சி விகிதத்தை அதன் முந்தைய விகிதமான 3.5% இருந்து 3.3% ஆக குறைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் சர்வதேச நாணய நிதியம் அதன் உலகளாவிய வளர்ச்சி கண்ணோட்டத்தை குறைத்துக்கொண்டது கொண்டது இது மூன்றாவது முறையாகும்.

மிக புதுமையான தனியார் நிறுவனமாக எந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) கண்டுபிடிப்பு சாதனை நிறுவனங்களின் அடல் தரவரிசைப் பட்டியலில் (ARIIA 2019) தனியார் நிறுவனங்கள் மத்தியில் வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (வி.ஐ.டி) முதலிடத்தை பெற்றுள்ளது.

எந்த நாட்டில் உள்ள விக்டோரியா துறைமுகத்திற்கு இந்தியாவின் முதல் பயிற்சிப்பிரிவு கப்பல்கள் (1TS) சென்றுள்ளது?

முதல் பயிற்சி பிரிவு கப்பல்களான (1TS) ஐஎன்எஸ் தரங்கினி, ஐஎன்எஸ் சுஜாதா, ஐஎன்எஸ் ஷர்துல் மற்றும் ஐசிஜிஎஸ் சாரதி செஷெல்ஸின் விக்டோரியா துறைமுகத்திற்குள் நுழைந்தது. முதல் பயிற்சி பிரிவு கப்பல்கள் தற்போது சம்பந்த் 05/18-19 என்றழைக்கப்படும் அதன் வெளிநாட்டுப் பணிக்கான கடைசி பயணநிலையில் உள்ளது.

இஸ்ரேல் பிரதமரின் பதவி காலம் எவ்வளவு?

இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேலின் தேசிய தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார், 2009 முதல் தொடர்ந்து நாட்டை வழிநடத்தி வருகிறார், இவரின் ஆட்சி காலம் 13 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நாடு வட கொரியாவுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பொருளாதாரத் தடையை நீட்டித்துள்ளது?

ஜப்பான் வட கொரியா மீதுள்ள வர்த்தகம் மற்றும் பிற தடைகளை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. வட கொரியாவின் அணுஆயுத சோதனை மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஆகியவை ஜப்பான் நீடித்த பொருளாதார தடைக்கு காரணமாக அமைந்தது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

ஏப்ரல் 11 நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Videoகிளிக்செய்யவும்

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here