ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 14,15 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 14,15 2018

அக்டோபர் 15 – மஹிலா கிசான் திவாஸ்

  • முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15 நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி தேவாலய வாரியம் புனித யாத்திரைக்கு வரும் யாத்ரீகளுக்கு இலவச விபத்து காப்பீட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நங்க்போ, மேகாலயாவில் ஜவுளி சுற்றுலா வளாகம் அமைக்க ஜவுளித் துறை அமைச்சகம் ரூ.7.8 கோடி ஒதுக்கீடு.
  • புது தில்லியில் காற்று தரம் எச்சரிக்கை அமைப்பை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்.
  • புதுடில்லியில் இந்திய பிரதம மந்திரிகளின் அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா
  • இந்திய எல்லை பாதுகாப்புப் படையினருடன் தசரா விழாவை கொண்டாட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தான் பிகானர் பயணம்.
  • மேற்கு வங்க அரசு இந்த ஆண்டு கடும் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு 210 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக உள்ளது.
  • இந்தியா மற்றும் சீனா இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கு முதல் கூட்டு பயிற்சித்திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது.
  • கல்லும் புயலால் பிரிட்டனின் தெற்குவேல்ஸ் பகுதிகளில் பாதிப்புகள் தொடர்கிறது.
  • WPI பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13% ஆக உயர்ந்துள்ளது
  • இந்தியாவின் மிகப்பெரிய IHGF- 46வது டெல்லி கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் அமைச்சர் அஜய் தம்தா திறந்து வைத்தார்.
  • துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு புது தில்லியில் 5வது பல் அறுவைசிகிச்சை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • 100 சதவீத வீட்டு மின்மயமாக்கத்தை நிறைவேற்றுவதற்காக சவுபாக்யா திட்டத்தின் கீழ் விருது வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு.
  • இந்திய உதவியுடன் 1200 வீடுகளை நிர்மாணிக்க இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்தியா மற்றும் இலங்கை கையெழுத்திட்டது.
  • .நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் எதிர்காலக் கொள்கை தங்க விருது – சிக்கிம் [உலகின் முதல் கரிம வேளாண்மை மாநிலமாக மாற்றுவதற்கான அதன் சாதனை]
  • இந்திய தேர்தல் கமிஷன் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனிப்பட்ட இணைய அடிப்படையிலான மொபைல் செயலி சி-விஜிலை அறிமுகப்படுத்துகிறது.
  • மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு

  • அர்ஜென்டினாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
  • மலேசியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.
  • லியாண்டர் பயஸ், மிஜுவல் ஏஞ்சல் ரெய்ஸ்-வரேலாவுடன் இணைந்து சாண்டோ டொமின்கோ ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார்.
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் குரோஷியாவின் போர்னா கரிக்கை தோற்கடித்து நோவக் ஜோகோவிக் பட்டம் வென்றார்.
  • இறுதிப்போட்டியில் இந்தியாவை பிரிட்டன் வீழ்த்தி, 2018 சுல்தான் ஜோகர் ஹாக்கி கோப்பையை வென்றது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!