நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –20, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –20, 2019

தேசிய செய்திகள்

EPFO உறுப்பினர்களுக்கு 8.65% வட்டி விகிதத்தை அரசாங்கம் அறிவித்தது
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியான (ஈபிஎஃப்ஒவின்) வைப்புத்தொகையின் 8.65 சதவீத வட்டி விகிதத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அதன் ஆறு கோடி சந்தாதாரர்களுக்கு ஈபிஎஃப் தற்போது வைப்புத்தொகைக்கான 8.65 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

கண்டன் புத்த மடாலயத்தில் புத்தரின் சிலையை  பிரதமர் மோடி மற்றும் மங்கோலிய ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளனர்
  • இந்தியா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மங்கோலிய அதிபர் கல்ட்மகின் பட்டுல்கா ஆகியோர் இணைந்து உலான்பாதரில் உள்ள கந்தன் புத்த மடாலயத்தில் புத்தர் சிலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட உள்ளனர்
  • ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மங்கோலிய ஜனாதிபதி, புதுடெல்லியில் இந்த வீடியோ கான்பரன்சில்  பங்கேற்கவுள்ளார். இந்தியாவுக்கும் மங்கோலியாவுக்கும் இடையே  சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட  கூட்டாண்மை மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் வலுவான அடித்தளம்  கடந்த 2015 ஆண்டிலிருந்து முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
55 வது ஐ.டி.இ.சி தினம் டாக்காவில் கொண்டாடப்பட்டது
  • 55 வது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐ.டி.இ.சி) தினம் செப்டம்பர் 19 அன்று பங்களாதேஷின் டாக்காவில் கொண்டாடப்பட்டது.
  • இந்தியாவில் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி போன்ற முதன்மை நிறுவனங்களில் குறுகிய மற்றும் நடுத்தர கால படிப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஐ.டி.இ.சி வழங்குகிறது. வளரும் நாடுகளுக்கான இந்தியாவின் மேம்பாட்டு உதவி வழங்குதலின் ஒரு பகுதியாக இது 1964 இல் நிறுவப்பட்டது.

அறிவியல்

கீழடி கண்டுபிடிப்புகள் கிமு 6 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது
  • பண்டைய சங்க யுகத்தின் கலாச்சார வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக தொல்பொருள் துறை (டி.என்.ஏ.டி), சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள கீழடியில்  அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கலாச்சார வைப்புகளை கி மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்குட்பட்டது என்று தெரிவித்துள்ளது.
  • இவ்வவாறு தேதியை (டி.என்.ஏ.டி),அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது இதுவே முதல் முறை ஆகும் .கீழடி கண்டுபிடிப்புகளுக்காக சமீபத்தில் பெறப்பட்ட அறிவியல் தேதிகள் தமிழ்-பிராமி எழுத்துக்களின் தேதியை மற்றொரு நூற்றாண்டுக்கு பின்னதாக குறிப்பிட்டுள்ளது அதாவது கி மு. 6 ஆம் நூற்றாண்டு என்று தெரிவித்துள்ளது.

மாநாடுகள் 

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழுவின் 3 வது கூட்டம்
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது.
  • ஊனமுற்றோர் துறையில் , அதாவது ஆர்.பி.டபிள்யூ.டி சட்டம் 2016 , அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரம், தனித்துவமான ஊனமுற்றோர் ஐடி திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தில் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து மத்திய ஆலோசனைக் குழு விவாதித்தது.
இந்தியாவிற்கும் பெல்ஜியம் லக்சம்பர்க் பொருளாதார ஒன்றியத்திற்கும்  இடையிலான கூட்டு பொருளாதார ஆணையத்தின் 16 வது அமர்வு
  • இந்தியாவிற்கும் பெல்ஜியம் லக்சம்பர்க் பொருளாதார ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டு பொருளாதார ஆணையத்தின் (ஜே.இ.சி) 16 வது அமர்வு 2019 செப்டம்பர் 17 அன்று புதுதில்லியில் நடைபெற்றது .
  • புது தில்லியில் 1990 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜே.இ.சி அமர்வுகள் நடத்தப்படுகிறது.
  • இந்த இரு ஆண்டு நிகழ்வு மூன்று நாடுகளின் தலைநகரங்களில் மாறி மாறி  ஏற்பாடு செய்யப்படுகிறது, மேலும் இது இந்தியாவிற்கும் பெல்ஜியம் லக்சம்பர்க் பொருளாதார ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக சிக்கல்களை விவாதிப்பதற்கான ஒரு முக்கிய கூட்டமாகும்.

தரவரிசை & குறியீடுகள்

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அறிக்கை
  • ஒரு நாட்டில் இருக்கும் மக்கள் அதிக அளவில் உலகில் உள்ள பிற நாடுகளுக்கு குடியேறுவதில், இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது, 2019 ஆம் ஆண்டின் படி 5 மில்லியன் சர்வதேச புலம்பெயர்ந்தோர் இந்தியாவில் இருந்து வருகிறார்கள், இது 2015 ல் 15.9 மில்லியனாக இருந்தது என்று  நியூயார்க்கில்   உள்ள ஐக்கிய  நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள சர்வதேச புலம்பெயர்ந்தோர் பங்கு அறிக்கை 2019ல் வெளிவந்துள்ளது .
  • பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிஏறுவதில்   பங்களாதேஷ் முன்னணியில் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஃபிஃபா தரவரிசையில் இந்தியாவிற்கு 104 வது இடம்
  • உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 104 வது இடத்தைப் பிடித்துள்ளது. பெல்ஜியம் முதலிடத்தையும், பிரான்ஸ்   இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது .

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

“மீன்வள புள்ளிவிவரங்கள் குறித்த கையேடு – 2018
  • மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங், இந்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத் துறையால் வெளியிடப்பட்ட “மீன்வள புள்ளிவிவரங்கள் குறித்த கையேடு – 2018” ஐ வெளியிட்டார்.
  • மீன்வள புள்ளிவிவரங்கள் குறித்த கையேடு – 2018 என்பது 13 வது பதிப்பாகும், இது மீன்வளத் துறையின் பல்வேறு அம்சங்களுக்கான பயனுள்ள புள்ளிவிவர தகவல்களை வழங்குகிறது. கடைசி (12 வது பதிப்பு) கையேடு 2014 இல் வெளியிடப்பட்டது.

திட்டங்கள்

தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி கூட்டணி (நீட்) திட்டம்
  • உயர்கல்வியில் சிறந்த கற்றல் விளைவுகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொழில்நுட்பத்திற்கான தேசிய கல்வி கூட்டணி (நீட்) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
  • கற்றபவரின் தேவைகளுக்கு ஏற்ப கற்றலை மேலும் தனிப்பயனாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்
  • அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (AICTE) நீட் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இருக்கும். MHRD ஆல் அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நிர்வகிக்கப்படும்.

பாதுகாப்பு செய்திகள்

இரண்டாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் “காந்தேரி
  • ‘ஷிப் பில்டர் டு தி நேஷன்’ என்று அழைக்கப்படும் மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்), இரண்டாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலான ‘காந்தேரியை’ இந்திய கடற்படைக்கு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியது
  • முதல் நீர்மூழ்கிக் கப்பலான காந்தேரி டிசம்பர் 06, 1968 அன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது , 20 ஆண்டுகளுக்கும் மேலான தேச சேவைக்கு பிறகு 1989 அக்டோபர் 18 ஆம் தேதி கடற்படையில் இருந்து ஓய்வுபெற்றது.
ஸ்ரீ ராஜ்நாத் சிங் ‘எல்.சி.ஏ தேஜாஸ் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்பு அமைச்சர் ஆனார்
  • ஸ்ரீ ராஜ்நாத் சிங் லைட் காம்பாட் விமானமான (எல்.சி.ஏ) ‘தேஜாஸில்’ பயணித்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்று வரலாற்றை படைத்துள்ளார்.
  • இத்தகைய போர் விமானங்களை உருவாக்கியதற்காக, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) ஆகிய நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
பெண்கள் பணியாளர்களை என்.டி.ஆர்.எஃப் சேர்க்க முடிவு
  • அடுத்த ஒரு வருடத்திற்குள் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) தனது புதிய பட்டாலியன்களில் பெண் பணியாளர்களை சேர்க்க உள்ளது. மத்திய அரசு, 2018 ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள என்.டி.ஆர்.எஃப் பட்டாலியன்களுடன் பெண்கள் குழுவை இணைக்கும் திட்டத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது

நியமனங்கள்

புதிய இந்திய விமானப்படை தலைவர்
  • இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதவ்ரியாவை அடுத்த விமானப்படைத் தலைவராக (சிஏஎஸ்) அரசாங்கம் நியமித்துள்ளது. அவர் செப்டம்பர் 30 ஆம் தேதி பொறுப்பேற்பார் என்றும் அவரது பதவி காலம் இரண்டு ஆண்டுகள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  • 36ரஃபேல் ஜெட் விமானங்களுக்கான பிரான்சுடனான ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

தேசிய புவி அறிவியல் விருதுகள்
  • 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய புவி அறிவியல் விருதுகள், நாடு முழுவதும் இருக்கும் இருபத்தி இரண்டு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டன . தேசிய புவி அறிவியல் விருதுகள், புவி அறிவியல், சுரங்க மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரிவுகளில் சிறப்பான பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது  அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) பேராசிரியர் சையத் வாஜி அஹ்மத் நக்வி, நீர்வாழ் உயிரின வேதியியல் ஆராய்ச்சி துறையில் தனது குறிப்பிடத்தக்க உலகளாவிய பங்களிப்புகளுக்காக சிறந்த விருதைப் பெற்றார்.
  • கோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோஹினி கங்குலி, பெட்ரோலஜி, எரிமலை மற்றும் புவி வேதியியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பணிக்காக இளம் விஞ்ஞானி விருது -2018ஐ பெற்றார்.

விளையாட்டு செய்திகள்

25 வது மூத்த பெண்களின் தேசிய கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு நுழைந்த முதல் அணி ’தமிழகம்
  • அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்று வரும் 25 வது மூத்த பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் முதல் கால் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 4-2 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியதன் மூலம் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது
பஜ்ரங் புனியா, ரவி தஹியா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்
  • கஜகஸ்தானில் உள்ள நூர்-சுல்தானில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின்  கால்  இறுதி போட்டிகளில் வென்றதன்  மூலம் பஜ்ரங் புனியா மற்றும் ரவி தஹியா ஆகியோர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!