நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –18, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –18, 2019

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம்
  • உலக மூங்கில் தினம் செப்டம்பர் 18 ஆம் தேதி பாங்காக்கில் நடைபெற்ற 8 வது உலக மூங்கில் காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது மற்றும் தாய் ராயல் வனத்துறையால் அறிவிக்கப்பட்டது. உலக மூங்கில் தினம் உலகளவில் மூங்கில் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக கொண்டாடக்கூடிய நாள்.
செப்டம்பர் 18 – உலக நீர் கண்காணிப்பு தினம்
  • ஒவ்வொரு ஆண்டும், உலக நீர் கண்காணிப்பு தினம் செப்டம்பர் 18 அன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பதில் பொதுமக்கள் விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் வளர்ப்பதற்காக 2003 ஆம் ஆண்டில் இந்த நாள் முதன்முதலில் நிறுவப்பட்டது.
  • குடிமக்கள் தங்கள் உள்ளூர் நீர்நிலைகளை அடிப்படை சோதனை செய்ய அதிகாரம் அளிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய செய்திகள்

ஸ்டீல்  அமைச்சகம்”சிந்தன் சிவீர்” என்ற கூட்டத்தை ஏற்பாடு செய்யதுள்ளது
  • இந்தியாவின் ஸ்டீல் அமைச்சகம் 2019 செப்டம்பர் 23 ஆம் தேதி ‘சிந்தன் சிவீர்’ என்ற ஒரு நாள் கூட்டத்தை புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்திய ஸ்டீல் துறையை துடிப்பான, திறமையான, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் உலகளவில் போட்டித்தன்மையுள்ளதாக மாற்றுவதன் மூலம் இந்திய  ஸ்டீல் தொழில்துறையின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கு முக்கிய பங்குதாரர்களிடையே விவாதங்களை நடத்துவதை சிந்தன் சிவிர் நோக்கமாகக் கொண்டுள்ளது.
HOG முறையை பின்பற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்கிறது
  • ரயில் பெட்டிகளில் ஏ.சி.க்கள் இயங்கும் மற்றும் மின்சாரம் வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப முறை புதிதாக மாற்றப்படவுள்ளது. இத்தகைய புதிய தொழில்நுட்ப மாற்றம் ஆண்டுக்கு சுமார் 1400 கோடி ரூபாய் அந்நிய செலாவணி சேமிப்பைக் கொண்டுவரும்.
  • புதிய தொழில்நுட்பமான – ஹெட் ஆன் ஜெனரேஷன் தொழில்நுட்பம், ஓவர்ஹெட் மின்சார விநியோகத்தின் மூலம் மின்சாரத்தை பெரும். பெரிய சத்தம் மற்றும் புகைகளை வெளியேற்றும் சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் இனி இருக்காது. இதுபோன்ற இரண்டு ஜெனரேட்டர்களுக்கு பதிலாக ஒரே ஒரு குறைந்த சத்தம் வரக்கூடிய ஜெனரேட்டர்கள்  அவசரநிலைக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் புத்தரின் பழங்கால வெண்கல சிலையை கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு (ஐ.சி) வழங்கினார்
  • நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் புத்தரின் பழங்கால வெண்கல சிலையை கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேலிடம் புதுடில்லியில் வழங்கினார். “பூமிஸ்பர்ஷா முத்ராவில் அமர்ந்த புத்தர்” என ஆவணப்படுத்தப்பட்ட இந்த சிலை கி.பி 12 ஆம் நூற்றாண்டை சார்ந்தது ஆகும்.
  • இந்த வெண்கல சிலை 1961 ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஏ.எஸ்.ஐ.யின் நாலந்தா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. அதன் பிறகு லண்டனை தளமாகக் கொண்ட வியாபார நிறுவனமான ரோஸி & ரோஸி பிப்ரவரி 2018 இல் மாஸ்ட்ரிச்ச்டில் ஏற்பாடு செய்த  ஏலத்தில் இந்த சிலை  எடுக்கப்பட்டது .

தமிழ்நாடு

திருச்சியில் என்ஐடியில் ஆராய்ச்சி ஆய்வகத்தை  அமெரிக்க நிறுவனம்  அமைக்கவுள்ளது
  • செமிகண்டக்டர்ஸ் மற்றும் சாப்ட்வேர்களின்  வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனமான டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (டிஐ), தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஒரு ஹைடெக், அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகத்தை அமைக்க உள்ளது.

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மான்களின் மறுவாழ்வுகான பயிற்சி

  • தமிழ்நாட்டில் உள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மான்களின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்வதற்கான ஒரு தனித்துவமான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூரின் சிவகங்கை தோட்டத்தில் எட்டு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் மேம்படுத்தல் பணிகளைத் தொடர்ந்து இந்த பயிற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

திரிபுராவில் நினைவுச்சின்னம் அமைக்க பங்களாதேஷ் அரசு முன்மொழிந்துள்ளது
  • 1971 பங்களாதேஷ் விடுதலைப் போரின் தியாகிகளின் நினைவாக திரிபுராவில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க பங்களாதேஷ் அரசு முன்மொழிந்துள்ளது. பங்களாதேஷ் தகவல் அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத் தலைமையிலான தூதுக்குழு, அகர்தலா- அகுவாரா ரயில் இணைப்பு, நீர்வழிகள் மற்றும் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர் .
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தர்காண்ட் விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம்
  • உத்தர்காண்ட் விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மோதி பாக் என்ற ஆவணப்படம் மாநிலத்தின் பவுரி கர்வால் பகுதியில் வசிக்கும் வித்யாதத் என்ற விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

மாநாடுகள்

“பொது கட்டிடக்கலையில் வளர்ந்து வரும் போக்குகள்” பற்றிய தேசிய கருத்தரங்கு
  • தற்போது நடைபெற்று வரும் ‘கட்டுமான தொழில்நுட்ப ஆண்டின்’ நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய பொதுப்பணித் துறை “பொது கட்டிடக்கலைகளில் வளர்ந்து வரும் போக்குகள்” குறித்த தேசிய கருத்தரங்கை  புதுதில்லியில் உள்ள விஜியன் பவனில் செப்டம்பர் 18, 2019 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
  • கட்டுமானத் துறையில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஏப்ரல் 2019 – மார்ச் 2020 ஐ ‘கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாக’ பிரதமர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பிஎஸ்எம், அமெரிக்கா, கனடா மற்றும் கிரேக்கத்தில் APEDA ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது
  • “வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு (பிஎஸ்எம்)” இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் 2019 ஆகஸ்ட் 20 ஆம் தேதி, இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தேநீர் உள்ளிட்ட வேளாண் பொருட்களின் இருபத்தி மூன்று ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவின் இறக்குமதியாளர்களை சந்தித்தனர்.
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து பல தயாரிப்பு சாலை நிகழ்ச்சியை 2019 செப்டம்பர் 16 அன்று ஏற்பாடு செய்தது.
சித்ராச்சார்யா உபேந்திர மகாராத்தில் ‘ஷாஷ்வத் மகாராத்தி’ கண்காட்சி
  • புது தில்லியில் உள்ள தேசிய கலாச்சார கேலரியில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ஜெய்ப்பூர் மாளிகையில், சித்ராச்சார்யா உபேந்திர மகாராத்தை பற்றிய ‘சஷ்வத் மகாராத்தி கண்காட்சியை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹ்லாத் சிங் படேல் மற்றும் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் ஸ்ரீ அனில் பைஜல் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
  • கண்காட்சியில் சித்ராச்சார்யா உபேந்திர மகாரதியின் 1000 க்கும் மேற்பட்ட கலை, வடிவமைப்பு மற்றும் நெய்த கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) பாதுகாப்பு விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உடன் இணைந்து மனித விண்வெளி மிஷனுக்கான மைய அமைப்புகளை மேம்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
  • அதன்படி மனித விண்வெளி பயண மையத்தின் (எச்.எஸ்.எஃப்.சி) இயக்குனர் டாக்டர் எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, மனித விண்வெளித் திட்டத்திற்கு குறிப்பிட்ட மைய அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்க பல்வேறு டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பாதுகாப்பு செய்திகள்

ஏர்-டு-ஏர் ஏவுகணை அஸ்ட்ரா வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
  • (ஏர்-டு-ஏர்) விண்ணிலிருந்து விண்ணைதாக்கும் ஏவுகணை ஆஸ்ட்ரா, ஒடிசா கடற்கரையில், செப்டம்பர் 16, 2019 அன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • இந்த ஏவுகணை சு -30 எம்.கே.ஐ யிலிருந்து ஏவப்பட்டது. வான் ஏவுகணையின் திறனை துல்லியமாக நிரூபிக்கும் வகையில் நேரடி வான்வழி  இலக்கு தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது.

விருதுகள்

2017 ஆம் ஆண்டிற்கான விஸ்வகர்மா ராஷ்டிரிய புரஸ்கார் மற்றும்  தேசிய பாதுகாப்பு விருதுகள்
  • புதுடெல்லியின் விஜியன் பவனில் 2017 ஆம் ஆண்டு செயல்திறன் ஆண்டிற்கான விஸ்வகர்மா ராஷ்டிரிய புரஸ்கார் (விஆர்பி) மற்றும் தேசிய பாதுகாப்பு விருதுகள் (என்எஸ்ஏ) ஆகியவற்றை ஸ்ரீ சந்தோஷ்குமார் கங்வார் வழங்கினார்.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 1965 முதல் “விஸ்வகர்மா ராஷ்டிரிய புராஸ்கர் மற்றும் “தேசிய பாதுகாப்பு விருதுகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

விளையாட்டு செய்திகள்

யு -17 ஜூனியர் பாய்ஸ் சுப்ரோட்டோ கோப்பை – 2019
  • புதுடெல்லியின் டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற யு -17 ஜூனியர் பாய்ஸ் சுப்ரோடோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் மேகாலயாவின் ஹோப்வெல் எலியாஸ் மேல்நிலைப்பள்ளி, 1-0 என்ற கோல் கணக்கில், பங்களாதேஷ் கிருதா சிக்ஷா புரோதிஷ்டானை (பி.கே.எஸ்.பி) தோற்கடித்தது படத்தை ஜெயித்தது.
சீனா ஓபன் பேட்மிட்டன் 
  • சாங்ஜோவில் தொடங்கவுள்ள, சீனா ஓபன் பேட்மிட்டனில், உலக சாம்பியனான பி வி சிந்து மற்றும் உலக நம்பர் 8 வீராங்கனையான சாய்னா நேவால் ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர். ஆண்கள் பிரிவில் பி சாய் பிரனீத் மற்றும் பருப்பள்ளி காஷ்யப் ஆகியோரும் களமிறங்க உள்ளனர்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!