நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 05, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 05, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம்
  • உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது 1974 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து, உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவலாக கொண்டாடப்படுகிறது.
  • ஒவ்வொரு உலக சுற்றுச்சூழல் தினமும் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்துகிற ஒரு கருப்பொருளை மையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும். 2019க்கான தீம் “காற்று மாசுபாட்டை ஒழிப்போம்”.
ஜூன் 5 – சட்டவிரோத, குறிப்பிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் 11-26 மில்லியன் டன் மீன் இழப்புக்கு பொறுப்பற்ற மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பு நடவடிக்கைகள் தான் பொறுப்பு என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தெரிவித்தது. இந்த தாக்கத்தை குறைப்பதற்கு, ஐ.நா. பொதுச் சபை 2015 ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கோல்14 ன் இலக்கு 4, குறிப்பாக சர்வதேச சமுதாயத்தை “சட்டவிரோத, குறிப்பிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பு நடைமுறைகளை” 2020க்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

தேசிய செய்திகள்

தமிழ்நாடு
தமிழ்நாடு சுகாதார சீர்திருத்த திட்டம்
  • இந்திய அரசு, தமிழ்நாடு அரசு (GoTN) மற்றும் உலக வங்கிக்கும் இடையே தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்திற்கான $ 287 மில்லியன் கடன் ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது
  • சுகாதாரத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றுநோயற்ற நோய்களின் பிரச்சனைகளை குறைத்தல் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நல சேவைகளை மேம்படுத்த இந்த திட்டம் கையெழுத்தானது . நிதி ஆயோகின் உடல்நலக்  குறியீட்டில் தமிழ்நாடு அனைத்து இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இது மிகவும் மேம்பட்ட சுகாதார விளைவுகளை பிரதிபலிப்பதாகவுள்ளது.
கேரளா
ஆலப்புழாவில் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விரைவில் மேம்படுத்தப்படவுள்ளது
  • பல்வேறு வைரஸ் நோய்களைப் பரிசோதிப்பதற்கான அதன் செயல்பாட்டு நம்பகத்தன்மையை கண்டுபிடிப்பதற்கு ஆலப்புழாவில் வைராலஜி இன்ஸ்டிடியூட் இன்னும் போராடி வருகிறது,வரவிருக்கும் மாதங்களில் இது மேம்படுத்தவுள்ளது.
  • இது தவிர, திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் ஒரு வைராலஜி இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டது. மேலும் ICMR இன் கீழ் ஒரு வைராலஜி இன்ஸ்டிடியூட் கோழிக்கோட்டில் அமைக்கப்பட்டது. இருப்பினும், மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு அந்த நிறுவங்களில் வசதிகள் தற்போது இல்லை.

சர்வதேச செய்திகள்

கியூபாவுக்கு பயணம் செய்வதில் முக்கிய புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளன
  • கியூபாவைப் பார்வையிடும் குடிமக்கள் மீது அமெரிக்கப் புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது , குரூஸ் கப்பல்களைத் தடைசெய்துள்ளது மேலும்  அதிகமான கல்வி பயணிகள் செல்வதையும் தடைசெய்து , கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மேலும் தனிமைப்படுத்தும்  முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது .
  • குரூஸ் கப்பல்களை அமெரிக்கா இனி கியூபாவுக்கு பயணிக்க அனுமதிக்காது மேலும் தீவுக்கு “மக்களுக்கு மக்கள்” என்றழைக்கப்படும் கல்வி மற்றும் கலாச்சார பயணங்களையும்  தடைசெய்துள்ளது  குரூஸ் கப்பல்களோடு சேர்ந்து தனியார் விமானங்கள் மற்றும் படகுகளையும்  தடைசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

விண்வெளி அறிவியல்

ஜூலை 9-16 க்கு இடையில் சந்திரயான்-2 ஐ  செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
  • இந்தியாவின் சந்திரனுக்கு அனுப்பும் இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2 ஐ சந்திரனுக்கு  அனுப்ப ஜூலை 9 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது மேலும் அதற்கான சரியான தருணத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ,GSLV Mark- III மூலம் முறையாக சந்திராயன்-2-ஐ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்த திட்டமிட்டுள்ளது . சந்திர கிரகத்தின் மூன்று தொகுதிக்கூறுகள், ஆர்பிட்டர் , லேண்டர் -விக்ரம் மற்றும் ரோவர் -ப்ரக்யான் ஆகியவை தயாராக உள்ளன என்று ISRO கூறியுள்ளது.

மாநாடுகள்

2 வது உலகளாவிய இயலாமை உச்சி மாநாடு
  • “2 வது உலகளாவிய இயலாமை உச்சி மாநாடு” 2019 ஜூன் மாதம்  6-8 தேதிகளில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் நடைபெறுகிறது.
  • உச்சிமாநாட்டின் குறிக்கோள், மாற்றுத்திறனாளி நபர்களை ஊக்கப்படுத்துதல்,அவர்களை உட்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு சுதந்திரமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை வாழுவதற்கு வழிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றில் உலகெங்கிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குரிய திட்டமாகும்
ஜி 20 நிதி மந்திரிகளின்  கூட்டம்
  • ஜூன் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஜி 20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரு நாள் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார். பூமியின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, சர்வதேச வரிவிதிப்பு ஆகியவற்றால் எதிர்கொள்ளப்படும் அபாயங்கள் மற்றும் சவால்கள் ஆகியவற்றில் இந்த கூட்டம் கவனம் செலுத்தவுள்ளது.
  • இந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து  ஜூன் 28-29-ல் ஒசாகாவில் G-20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது .

வணிக  மற்றும் பொருளாதார செய்திகள்

பொருளாதார கணக்கெடுப்பு -2019
  • 2019 ஆம் ஆண்டில், ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பை புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) நடத்தி வருகிறது.
  • தற்போதைய பொருளாதார கணக்கெடுப்பில் புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆனது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அமைச்சகத்தின் கீழ் உள்ள CSC e -ஆளுமை சேவைகள் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பை நடத்தவுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5%
  • தற்போதைய நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
  • உலக வங்கி , உலகளாவிய பொருளாதார முன்னேற்ற அறிக்கையில் அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளிலும் இதே வளர்ச்சி விகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.

விருதுகள்

உலகளாவிய தலைசிறந்த தலைவர்  விருது 2019
  • இந்தியாவில் பிறந்த கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் நாஸ்டாக்கின் தலைவர் அடேனா ப்ரிட்மன் ஆகியோருக்கு முன்னணி தொழில்நுட்ப  தளங்களில் இரண்டு நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக அமெரிக்காவிலன் வணிக ஆலோசனை குழு USIBC,  உலகளாவிய தலைசிறந்த தலைவர் விருது 2019-யை வழங்கியுள்ளது.

நியமனம்

ஐ.நா. பொதுச் சபைக்கான 74 வது அமர்வுக்கான ஜனாதிபதியாக  நைஜீரியா தூதர் டிஜானி முஹம்மது-பந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஐக்கிய நாடுகள் சபைக்கான நைஜீரியா தூதர் டிஜானி முஹம்மது-பந்தே ஐ.நா. பொதுச் சபைக்கான 74 வது அமர்வுக்கான ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விதிகளின் படி, 74 வது அமர்வுக்கான ஜனாதிபதியாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

விளையாட்டு செய்திகள்

2023 ஆசிய கால்பந்து கோப்பையை  சீனா நடத்துகிறது.
  • தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஏலத்தை கைவிட்டதை அடுத்து ஆசிய நாடுகளுக்கான 2023 கால்பந்து போட்டியை சீனாவில் நடக்கவிருக்கிறது. இதை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு பாரிசில் உறுதிப்படுத்தியது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 04 & 05, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!