நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 15, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 15 – உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள்
  • ஐ.நா. பொதுச் சபை அதன் தீர்மானம் 66/127 ல் ஜூன் 15 ம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினமாக நியமித்தது .இது உலகெங்கிலும் நம் பழைய தலைமுறையினருக்கு அவமதிப்பு மற்றும் துன்பம் தருவதை எதிர்த்து நிற்கக்கக்குடிய நாளாகும்.
  • முதியோர் அவமதிப்பு என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முதியவர்களின் சுகாதார மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் ஒரு உலகளாவிய சமூகப் பிரச்சினை மற்றும் சர்வதேச அளவில் சமூகத்தின் கவனத்திற்குத் தகுதியான ஒரு பிரச்சினை ஆகும்.

தேசிய செய்திகள்

அசாம்
வடகிழக்கு உள்நாட்டு தொழிலாளர்கள் திறனாய்வுக் கூட்டம்
  • அசாமில், வடகிழக்கு உள்நாட்டு தொழிலாளர்கள் திறனாய்வுக் கூட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது. பலவிதமான முகவர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பரிமாற்றுவதற்கான ஒரு தளத்தை இந்த மாநாடு வழங்கும். திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் அசாம் திறன் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றால் இந்த முதல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இஸ்ரோ முதல் முறையாக இந்திய பள்ளி மாணவர்களுக்கு அதன் ஆய்வகங்களை திறக்கிறது
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO) முதன் முறையாக இந்த ஆண்டு முதல் இரண்டு வார பயிற்சிக்கு இந்திய பள்ளி மாணவர்களுக்கு ஆய்வகங்களை திறந்து வைத்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 108 மாணவர்களின் முதல் தொகுதி சமீபத்தில் பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டா, திருவனந்தபுரம் மற்றும் பிற இடங்களில் உள்ள அதன் ஆய்வகங்களில் பார்வையிட்டனர்.
  • யுவிகா அல்லது யுவ விக்யானிக் காரியக்ரம் எனும் புதிய இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி தொகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரவரிசை & குறியீடுகள்

பிபா கால்பந்து தரவரிசை: இந்தியாவுக்கு 101-வது இடம்
  • வெளியிடப்பட்டFIFA தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 101 வது இடத்தில் உள்ளது. தாய்லாந்தில் கிங்ஸ் கால்பந்து கோப்பையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

மாநாடுகள்

இந்தியா-கிர்கிஸ் வர்த்தக மன்றம்
  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிர்கிஸ்தான் அதிபர் ஜின்பேவ் ஆகியோர் பிஷ்கெக்கில் இந்திய-கிர்கிஸ் வணிக மன்றத்தை துவங்கினர். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான திறனைப் பற்றி ஆராய, இரு தலைவர்களும் தங்கள் வணிக சமூகங்களைக் கேட்டுக்கொண்டனர். இருதரப்பு கூட்டங்களுக்குப் பிறகு, மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மை உள்ளிட்ட பரந்த அளவிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த 15 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கிம்பர்லி செயல்முறை இடைநிலை கூட்டம் 2019
  • கிம்பர்லி செயல்முறை (கேபி) இன் இடைநிலை கூட்டத்தை இந்தியா 2019 ஜூன் 17 முதல் 21 வரை மும்பையில் நடத்துகிறது. கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் திட்டத்தின் (கேபிசிஎஸ்) வெவ்வேறு செயற்குழுக்கள் மற்றும் குழுக்களின் கூட்டங்களைத் தவிர, வைர டெர்மினாலஜி மற்றும் கைவினை சுரங்க தொடர்பான இரண்டு சிறப்பு மன்றங்கள் இந்த இடைநிலை கூட்டத்தின் போது நடைபெறவுள்ளது. ஐந்து நாள் கூட்டத்தில் இந்திய அரசு மற்றும் பிற நாடுகள், தொழில் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
  • கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களில் ஒருவரான இந்தியா, 2019 ஆம் ஆண்டிற்கான கிம்பர்லி செயலாக்கத்தின் தலைவராகவும் ரஷ்ய கூட்டமைப்பு துணைத் தலைவராகவும்  உள்ளது. இந்தியா இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டில் கேபிசிஎஸ் தலைவராக இருந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்

அசாமில் மின்-வெளிநாட்டு தீர்ப்பாயத்தை (e-FT) அமைக்க ஒப்புதல்
  • அசாமில் மின்-வெளிநாட்டு தீர்ப்பாயத்தை (e-FT) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. e-FT மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறியதாவது, வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை திறம்பட கண்காணிப்பதற்கும் தீர்ப்பதற்கும், முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த e-FT தகவல் தொழில்நுட்பத் துறை (IT) அமைப்பு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
  • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் மாநில அளவிலான அனைத்து பங்குதாரர்களின் உயிரியளவுகள் (பயோமெட்ரிக்), சுய தகவல்களையும் பராமரித்து, அனைத்து தகவல்களையும் கணினிமயமாக்கி சட்டவிரோதமாக குடியேறியவர்களின் தகவல்களை  கைப்பற்றுவதாகும். நலத்திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளை சட்டப்பூர்வமாக்குவதற்கும்  இது உதவும்.
பொதுப் பயிற்சி இயக்குநரகம், சிஸ்கோ(Cisco)  மற்றும் அசெண்டர்  உடன் ஒப்பந்தம்
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் பொதுப் பயிற்சி இயக்குனரகம் அதன் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ) மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இளைஞர்களைத் திறமையாக்குவதற்காக சிஸ்கோ(Cisco) மற்றும் அசெண்டர் (Accenture) உடன் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITIs)  சுமார் 15 லட்சம் மாணவர்கள் பாரத் திறன்கள் போர்ட்டல் வழியாக டிஜிட்டல் கல்வியை கற்கலாம். இந்த திட்டம் இந்தியா முழுவதும் ஐ.டி.ஐ.களில் சேரும் மாணவர்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான திறன்களுடன் மேம்படுத்துவதாக உள்ளது .

பாதுகாப்பது செய்திகள்

“கார்கில் போர்” வெற்றியின் 20 வது ஆண்டுவிழா:
  • 2019 ஆம் ஆண்டு, ‘கார்கில் போர்’ என பிரபலமாக அழைக்கப்படும் ‘ஆபரேஷன் விஜய் ‘ யின் வெற்றிக்கான 20 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. கார்கில் போர் என்பது வலுவான அரசியல், இராணுவ மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளின் சரித்திரமாகும். கார்கில் போரில் இந்த ஆண்டு கார்கில் போர் வெற்றியின் 20 வது ஆண்டு நிறைவை பெருமை, மரியாதை மற்றும் உத்வேகத்துடன் நமது தேசம்  கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, ‘ஆபரேஷன் விஜயின்’ வெற்றியின் 20 வது ஆண்டுவிழா ‘நினைவில் கொள்ளுங்கள், மகிழ்ச்சி, புதுப்பித்தல்’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

விருதுகள்

பிபிசி உலக சேவை உலகளாவிய சாம்பியன் விருது
  • இந்தியாவில் தினந்தோறும் சுமார் 17.5 லட்சம் குழந்தைகளுக்கு சுவைமிக்க மதிய உணவினை இலவசமாக வழங்கி வரும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான அட்சயா பாத்ரா தொண்டு நிறுவனத்துக்கு பிபிசி உலக சேவை உலகளாவிய சாம்பியன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற ‘அட்சய பாத்ரா’ தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வெங்கட் ஆவர் .
பால சாகித்ய புரஸ்கார் விருது மற்றும் யுவ புரஸ்கார் விருது 2019ஐ சாகித்திய அகாடமி அறிவித்தது
  • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கு (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.
  • மொத்தம் 23 பேருக்கு யுவ புரஸ்கார் விருதும், 22 பேர் பால சாகித்ய புரஸ்கார் விருதும் பெறுகின்றனர். இதில் 2 பிரிவிலும் தமிழக எழுத்தாளர்கள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
  • ‘வால்’ என்ற கவிதை தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் இலக்கியத்தில் மொத்த பங்களிப்புக்காக தேவி நாச்சியப்பனுக்கு (தெய்வானை) பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 15, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!